அனகா ஜெ. கோலத்

அனகா ஜெ. கோலத் (Anagha J. Kolath) என்பவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழிக் கவிஞர் ஆவார். இவர் 2022 இல், சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருதினைப் பெற்றார்.

அனகா ஜெ. கோலத்
Anagha J. Kolath
பிறப்பு1994 (அகவை 29–30)
கோட்டயம் மாவட்டம், கேரளம்
தொழில்கவிஞர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மெழுகுதிரிக்கு சொந்தம் தீப்பெட்டி
குறிப்பிடத்தக்க விருதுகள்யுவ புராஸ்கர் 2022

சுயசரிதை

தொகு

அனகா ஜே. கோலத் 1994ஆம் ஆண்டு, கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலாவில் உள்ள கோலத் வீட்டில், வங்கி அதிகாரியான கே. என். ஜெயச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியை பி. ஜி. சியாமளாதேவி ஆகியோரின் மூன்று மகள்களில் இளையவராகப் பிறந்தார்.[1]

அனகா தனது ஆரம்பக் கல்வியைப் பாலா சக்தி விலாசம் என். எஸ். எஸ். பள்ளியில் பயின்றார்.[1] கிட்டாங்கூர் என். எஸ். எஸ். மேனிலைப் பள்ளியில் மேல் நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] சங்கனாச்சேரி கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அனகா, மலையாளத்தில் முதுகலைப் படிப்பதற்காகக் கடப் பள்ளியில் பயின்றார்.[1]

இலக்கிய வாழ்க்கை

தொகு

இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது அனகா தனது முதல் கவிதையை எழுதினார்.[1] கவிதைகள் எழுதுவதோடு மட்டுமின்றி கவிதைகளை வாசிப்பதிலும் வல்லவர். சிறுவயதிலிருந்தே குருவாயூர் தேவஸ்தானம் நடத்தும் நாராயணீயம், பூந்தானம் பாராயணம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.[1] 2013-ல், குருவாயூர் கோவிலிலிருந்து இவருக்குச் சுவர்ண முத்திரை (தங்கப் பதக்கம்) வழங்கப்பட்டது.[1] ஒரு முன்னணி மலையாள தொலைக்காட்சியில் கவிதை வாசிப்புப் போட்டியில் மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளார்.[1]

வெளியீடுகள்

தொகு

தன் கவிதைகளைத் தொகுத்து வெளியிடத் தயங்கிய அனகாவை கட்டாயப்படுத்தி கவிதையை வெளியிடச் செய்து அதற்குத் தேவையான உதவிகளைச் செய்தவர் எழுத்தாளர் கே.ஜெயக்குமார்.[2] சுமார் 30 கவிதைகள் நான் அறிந்த காதல் என்ற தலைப்பில் அனகாவின் முதல் கவிதைத் தொகுப்பாக 2014-ல் வெளியிடப்பட்டது.[3] 51 கவிதைகளுடன் காவ்யாமிர்தம் என்ற கவிதைப் பாடல் ஒலித் தட்டாக வெளியிடப்பட்டுள்ளது.[1] இவர் 2020-ல் சாகித்திய அகாதமியின் இணையவழி கவியரங்கில் (கவிதை விவாத மேடை) கலந்துகொண்டார்.[2]

கவிதை மட்டுமின்றி, இதழ்கள் மற்றும் இணையத்தில் கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அனகா தீவிரமாக உள்ளார்.[2]

விருதுகளும் கௌரவங்களும்

தொகு

சிறந்த கவிதைக்கான அனைத்திந்திய வானொலி யுவவாணி விருது, பன்னாட்டுத் தாய்மொழி தினம்-2014, அங்கணம் கவிதா விருது (2014) கல்லூரி மாணவர்களுக்கான கே. எம். சுகுமாரன் நினைவு விருது (2014) மற்றும் புனலூர் பாலன் கவிதை விருது[4] (2020) உள்ளிட்ட பல விருதுகளை அனகா பெற்றுள்ளார்.[5] 2022-ல், இவர் தனது மெழுகுத்திரிக்கு சுவந்தம் தீப்பெட்டி என்ற கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Daily, Keralakaumudi. "അനഘയുടെ അക്ഷരങ്ങൾ". Keralakaumudi Daily (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  2. 2.0 2.1 2.2 "കഥാകൃത്ത് സേതുവിനും കവി അനഘ ജെ കോലത്തിനും കേന്ദ്ര സാഹിത്യ അക്കാദമി പുരസ്‌കാരം » Newsthen" (in மலையாளம்). 2022-08-24. பார்க்கப்பட்ட நாள் 2022-08-25.
  3. "A little wordsmith par excellence - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  4. "പുനലൂർ ബാലൻ പുരസ്‌കാരം" (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  5. "On write path". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  6. "Malayalam writers Sethu, Anagha J Kolath bag Sahitya Akademi awards". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனகா_ஜெ._கோலத்&oldid=3935005" இலிருந்து மீள்விக்கப்பட்டது