அனந்தராவ் பாட்டீல்
அனந்தராவ் பாட்டீல் (Anantrao Patil) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மகாராட்டிராவின் புனேவைச் சேர்ந்த இவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் தலைவராகவும் மகாராட்டிர மாநில அரசியலில் அனந்தராவ் செயல்பட்டார். 1971ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக மகாராட்டிராவின் கேத்து மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். முன்னதாக 1967 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை அகமது நகர் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.[3] 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் 1970 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் வரையிலும் பின்னர் 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதி முதல் 1975 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை இந்தியாவின் அச்சகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
அனந்தராவ் வித்தல்ராவ் பாட்டீல் Anantrao Vithalrao Patil | |
---|---|
இந்தியன் நாடாளுமன்றம் கேத்து மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1967–1970 | |
பதவியில் 1971–1977 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தெகு, மகாராட்டிரம், இந்தியா | 22 நவம்பர் 1921
இறப்பு | 16 ஏப்ரல் 2008[1] புனே, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 86)
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய விடுதலை இயக்கம் |
செயற்குழு | இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் |
அனந்தராவ் பாட்டீல் புனேயில் உள்ள இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பத்திரிகையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். யசுவந்தராவ் சவானின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதினார்.[4]
இறப்பு
தொகு2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதியன்று அனந்தராவ் பாட்டில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Parliamentary Debates: Official Report. India: Lok Sabha Secretariat. 2008. p. 9.
- ↑ Who's who - Issue 5. India: Lok Sabha Secretariat. 1971. p. 458.
- ↑ "Member's Profile". Archived from the original on 14 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்பிரவரி 2012.
- ↑ '"A Brief Biographical Sketch of Shri. Y.B. Chavan". Yashwantrao Chavan Pratishthan. Archived from the original on 20 April 2010.
- "Combined List of Members (First Lok Sabha to Thirteenth Lok Sabha)". Parliament of India. Archived from the original on 27 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்பிரல் 2010.
- "Nominees of the Speaker, Lok Sabha and Chairman, Rajya Sabha". Press Council of India. Archived from the original on 8 April 2010. பார்க்கப்பட்ட நாள் 30 April 2010.