அனந்து காட்கில்

இந்திய அரசியல்வாதி மற்றும் கட்டடக் கலைஞர்

அனந்து காட்கில் (Anant Gadgil) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தில் உள்ள வய் நகரத்தின் வேல்னேசுவர் கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று வித்தல்ராவ் காத்கில்லின் மகனாக இவர் பிறந்தார். நர்கர் விசுணு காட்கில்லின் பெயரனாக அறியப்படும் அனந்து காட்கில் ஒரு கட்டடக் கலைஞராகவும் அறியப்படுகிறார்.[1] மும்பை பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையில் இளையர் பட்டமும் அமெரிக்காவில் இதே பாடத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மகாராட்டிர சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.[2] மகாராட்டிர மாநில அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[3] திருமணம் செய்து கொண்ட இவர் மும்பையில் வசிதது வருகிறார்.[4]

படைப்புகள்

தொகு
  • சிமாச்சியப்பா புனேகர் (மராத்தி நூல்)
  • பிஞ்சசு & பஞ்சசு[5]

விருதுகள்

தொகு

அனந்தராவ் காட்கிலின் சிமாச்சியப்பா புனேகர் என்ற மராத்தி புத்தகம் நகைச்சுவையான எழுத்துக்கான மகாராட்டிர சாகித்ய அகாதமி விருதை வென்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "निष्ठावंतांची काँग्रेसला गरज नाही का?" (in mr). Loksatta. 23 July 2017. https://www.loksatta.com/pune-news/mla-anant-gadgil-criticized-congress-offical-1516686/. 
  2. Marpakwar, Prafulla (18 June 2014). "Congress plays Brahmin card: Congress plays Brahmin card in Maharashtra, makes governor nominate Anant Gadgil to Vidhan Parishad" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Congress-plays-Brahmin-card-in-Maharashtra-makes-governor-nominate-Anant-Gadgil-to-Vidhan-Parishad/articleshow/36727364.cms. பார்த்த நாள்: 30 April 2023. 
  3. Ganapatye, Mayuresh (22 July 2017). "All is not well in Maharashtra Congress, party spokesperson Anant Gadgil says he is being sidelined" (in en). இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/maharashtra-congress-party-spokesperson-anant-gadgil-1025780-2017-07-22. 
  4. Joshi, P. K. (1989). Gadgil Kulavruttanta [The Gadgil Family Genealogy Almanac] (in மராத்தி). Pune. pp. 213–217.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  5. "Take it with a pinch of salt". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்து_காட்கில்&oldid=3920510" இலிருந்து மீள்விக்கப்பட்டது