அனந்த பசுதேப கோவில்
ஆனந்த பசுதேப கோவில் Ananta Basudeba temple கிருஷ்ணர் கோவிலாகும். இது மேற்கு வங்கத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் பன்ஷெபீரியாவில் உள்ள ஹங்ஷேஷ்வரி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ராஜ ரமேஸ்வர தத்தாவால் 1679 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் சுவர்களில் நேர்த்தியான களிமண் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது பாரம்பரிய ஈகா-ராட்னா பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கோபுரம் எண்கோணத்தில் அமைந்துள்ளது. . இக்கோவிலின் களிமண் வேலைப்பாடுகள் மகாபாரதம், ராமாயணம் மற்றும் கிருஷ்ண லீலைகளை சித்தரிக்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- "Places Of Interest Of Hooghly District: Hangseswari temple". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-25.