அனந்த மாணிக்கியா

திரிபுரா இராச்சியத்தின் ஆட்சியாளர்

அனந்த மாணிக்கியா (Ananta Manikya) (இ. 1567) 1563 முதல் 1567 வரை திரிபுரா இராச்சியத்தின் மாணிக்ய வம்சத்தின் ஆட்சியாளராக இருந்தார். இவரது முன்னோடியுடன் ஒப்பிடுகையில் இவர் பலவீனமான மன்னராக இருந்ததுள்ளார். இவர் தனது செல்வாக்கு மிக்க மாமனாரின் கட்டுப்பாட்டின் கீழ் தனது ஆட்சியைக் கழித்தார். சில குறுகிய ஆண்டு கால ஆட்சியின் பின்னர் இவர் இறந்து போனார். பின்னர், ஆட்சி இவரது மாமனாரின் கைகளில் சாத்தியமானது.

அனந்த மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் அரசன்
ஆட்சிக்காலம்1563–1567
முன்னையவர்இரண்டாம் விசய மாணிக்கியா
பின்னையவர்முதலாம் உதய் மாணிக்கியா
இறப்பு1567
பட்டத்தரசிரத்னாவதி
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைஇரண்டாம் விசய மாணிக்கியா
மதம்இந்து சமயம்

வரலாறு தொகு

இரண்டாம் விசய மாணிக்யாவின் இரண்டாவது மகனாகப் பிறந்தாலும், அனந்தாவின் தந்தையால் வாரிசாகப் பெயரிடப்பட்டார். இவரது மூத்த சகோதரர் தங்கர் ஃபா ஒடிசாவின் முகுந்த தேவாவின் அரசவையில் வாழ அனுப்பப்பட்டார். இந்த வழக்கத்திற்கு மாறான வாரிசுக்கான காரணம் சர்ச்சைக்குரியது. முந்தையது ஆட்சி செய்ய அதிக உடல் வலிமையைக் கொண்டிருக்கவில்லை எனக் கருதப்பட்டது அல்லது அசுபமான சாதகத்துடன் பிறந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.[1][2]

பதவி தொகு

1563 இல் விசய மாணிக்கியாவின் மரணத்தைத் தொடர்ந்து, அனந்தா ஒரு விரிவான மற்றும் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட ராச்சியத்தைப் பெற்றார். [3] வரலாற்றாசிரியர் தம்பருதர் நாத் "ஒரு தகுதியான தந்தைக்கு தகுதியற்ற மகன்" என்று இவரை விவரித்தார். இவர் தன்னை ஒரு பலவீனமான மன்னராக நிரூபித்தார். முற்றிலும் தனது மாமனாரான முதலாம் உதய் மாணிக்கியாவின் அதிகாரத்தின் கீழ் இருந்தார். [4] [5] [6]

தர்ரங் ராஜ் வம்சவலி, கோச் அரசர்களின் வரலாற்றின் படி, கோச் அரசர் நர நாராயணனும் அவரது சகோதரர் சிலரும் இந்த காலகட்டத்தில் திரிபுரா மீது படையெடுத்தனர். இந்த கட்டத்தில் திரிபுராவின் ஆட்சியாளராக அனந்தா என்று தற்காலிகமாக அடையாளம் காணப்பட்டார். போரில் அனந்தா பேரழிவுகரமான தோல்வியை சந்தித்ததாகவும், 18,000 வீரர்களை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த உரையின் நம்பகத்தன்மை சர்ச்சைக்குரியது. இது விவரிக்கப்பட்ட நிகழ்வுகளை சில சந்தேகத்துடன் பார்க்க வழிவகுக்கிறது.[4][5]

இறப்பு தொகு

அனந்தா சிறிது காலம் மட்டுமே ஆட்சி செய்தார். 1567 இல் இறந்தார். இவர் இறந்த விதம் நிச்சயமற்றது, திரிபுராவின் வலற்று நூலான ராஜ்மாலாவின் வெவ்வேறு பதிப்புகளில் இது காய்ச்சலின் விளைவு அல்லது கோபி பிரசாத்தின் உத்தரவின் பேரில் இவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. [7] [8] பின்னர், கோபி பிரசாத் அரியணையைக் கைப்பற்றினார். உதய் மாணிக்கியா என்ற பெயரையும் ஏற்றுக்கொண்டார். கோபிசந்தின் மகளான அனந்தாவின் மனைவி ரத்னாவதி இவரது இறுதிச் சடங்கில் உடன்கட்டை ஏற முயன்றார். இருப்பினும் அவரது தந்தை அதைத் தடுத்துவிட்டார். பின்னர் சந்திப்பூருக்கு ராணியாக்கப்பட்டு அவர் சமாதானப்படுத்தப்பட்டார். [9]

சான்றுகள் தொகு

  1. Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D.. Sterling. பக். 21. https://books.google.com/books?id=WoJ5AAAAIAAJ. 
  2. Singh, Jai Prakash (1980). Coinage of Bengal and Its Neighbourhood. Numismatic Society of India, Banaras Hindu University. பக். 34. https://books.google.com/books?id=ABYaAAAAIAAJ. 
  3. Sarma, Ramani Mohan (1987). Political History of Tripura. Puthipatra. பக். 73. https://books.google.com/books?id=bmpuAAAAMAAJ. 
  4. 4.0 4.1 Nath, Dambarudhar (1989). History of the Koch Kingdom, C. 1515-1615. Mittal Publications. https://books.google.com/books?id=ECxUOSudNGYC&pg=PA63. 
  5. 5.0 5.1 Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D.. Sterling. பக். 21. https://books.google.com/books?id=WoJ5AAAAIAAJ. 
  6. (Sarma 1987, ப. 74)
  7. (Roychoudhury 1983, ப. 22)
  8. (Sarma 1987, ப. 6)
  9. (Sarma 1987, ப. 75)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த_மாணிக்கியா&oldid=3801193" இலிருந்து மீள்விக்கப்பட்டது