இரண்டாம் விசய மாணிக்கியா
இரண்டாம் விஜய மாணிக்கியா (Vijaya Manikya II) (ஆட்சி 1516 - 1563 பொ.ச.), விஜய் அல்லது பிஜோய் என்றும் உச்சரிக்கப்படும் இவர், 1532 முதல் 1563 வரை திரிபுராவின் மன்னனாக இருந்தார். இளம் வயதிலேயே அரியணையில் ஏறிய இவர், சக்திவாய்ந்த வங்காள சுல்தானகம் உட்பட சுற்றியுள்ள பல இராச்சியங்களில் தொடர்ச்சியான வெற்றிகளைத் தொடங்கி, ஒரு வலிமைமிக்க இராணுவத் தலைவராக தன்னை நிரூபித்தார். இவரது ஆட்சியின் போது, திரிபுராவின் வலிமை மற்றும் செல்வாக்கு அதன் உச்சத்தை அடைந்தது. மேலும் இவரை அதன் மிகப்பெரிய மன்னர்களில் ஒருவராக பார்க்கவும் வழிவகுத்தது.
இரண்டாம் விசய மாணிக்கியா | |
---|---|
திரிபுராவின் மகாராஜா | |
ஆட்சிக்காலம் | 1532–1563 |
முன்னையவர் | இந்திர மாணிக்கியா |
பின்னையவர் | அனந்த மாணிக்கியா |
பிறப்பு | அண். 1516 |
இறப்பு | 1563 (வயது 47) |
பட்டத்தரசி[1] |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | மாணிக்கிய வம்சம் |
தந்தை | தேவ மாணிக்கியா |
மதம் | இந்து சமயம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர், தேவ மாணிக்கியா என்பவரின் மகனாகப் பிறந்தார்.[2]இவர் குழந்தையாக இருந்தபோது, இவரது தந்தை படுகொலை செய்யப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பின்னர் இராணுவத் தளபதி தைத்யநாராயணனால் விடுவிக்கப்பட்டார். இவர் 1532-இல் தனது எதிரியான இலட்சுமிநாராயணனைக் கொன்ற பிறகு பதவிக்கு வந்தார்.[3][4]
திரிபுராவின் வரலாற்றைக் கூறும்ராஜ்மாலாவின் கூற்றுப்படி, விஜயன் ஆரம்பத்தில் தனது தளபதியின் பாதுகாப்பில் இருந்தார். அவருடைய மகளை இவர் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், இளம் வயதில் தனது மாமனாரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியிருந்தது. அவர் இராச்சியத்தின் உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். மேலும், விஜயனை ஒரு பொம்மை-மன்னராகப் பயன்படுத்தினார். பதிலுக்கு விஜயன் தைத்யநாராயணனைக் கொன்றதாக ராஜ்மாலா கூறுகிறது. [5] [6] இருப்பினும், தைத்யநாராயணன் என்ற இராணுவத் தலைவரால் கட்டுப்படுத்தப்பட்ட முந்தைய மன்னரான முதலாம் விசய மாணிக்கியா என்பவரின் விவரங்களுடன் விஜயன் பற்றிய விவரங்கள் முரண்பட்டதாக சில சான்றுகள் உள்ளன. [7]
இராணுவ விரிவாக்கம்
தொகுஇவரது ஆட்சி இடைக்கால திரிபுராவின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. [3] தைத்யநாராயணனின் மரணம் இராச்சிய நிர்வாகத்தில் இராணுவத் தலைவர்களின் பெரும் செல்வாக்கைக் குறைத்தது. விஜயன் தான் சொந்தமாக நிர்வாக அதிகாரத்தை ஒருங்கிணைக்க அனுமதித்தது. இவர் தனது கணிசமான இராணுவ வெற்றிகளை அடைவதில் தனது முழு அதிகாரங்களையும் செலுத்துவதற்காக இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.[8]
இராச்சியத்தின் இராணுவத்தை நவீனமயமாக்குவதிலும் அதன் செல்வாக்கை வலுப்படுத்துவதிலும் பெரும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. வில்லாளர்கள், யானைகள், பீரங்கிகள் மற்றும் கடற்படை ஆகியவை ஒழுங்கமைக்கப்பட்டு அதன் அணிகளில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில் திரிபுராவின் எல்லைகளில் இராணுவ முகாம்கள் நாட்டின் இறையாண்மையை சிறப்பாகப் பாதுகாக்க நிறுவப்பட்டன. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நிகழும் போக்குகளுக்கு ஏற்ப, விஜயனின் ஆட்சியின் போது குதிரைப்படைகள் இராணுவத்தின் உள்ளார்ந்த பகுதியாக மாறியது. ஆப்கானிய வீரர்களின் உதவியுடன் இது நிறுவப்பட்டது.[9] இந்த சீர்திருத்தங்கள் 200,000 காலாட்படை, 10,000 குதிரைப்படை, 1000 யானைகள் மற்றும் 5000 படகுகள் கொண்ட ஒரு வலிமைமிக்க இராணுவத்தை உருவாக்கியது என்று நாளாகமம் கூறுகிறது.[10][11]
திரிபுராவின் இராணுவ வலிமையைப் பற்றிய இந்த உணர்தல், ஆக்கிரமிப்பு பிராந்திய வெற்றிகளின் ஒரு காலகட்டத்தைத் தொடங்க அனுமதித்தது. இதன் விளைவாக விஜயனின் கட்டுப்பாட்டின் கீழ் நிலங்கள் விரிவான விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. சில்ஹெட் மற்றும் ஜெயந்தியாவின் பகுதிகள் கைப்பற்றப்பட்டு இராச்சியத்தில் இணைக்கப்பட்டன, காசியாவின் ஆட்சியாளர் தானாக முன்வந்து திரிபுரி ஆட்சிக்கு அடிபணிந்தார்கள். மேலும், சிட்டகொங் வங்காளத்தின் ஆப்கானிய ஆட்சியாளர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றப்பட்டது. [12] [5] [13]
இருப்பினும், இவர் அவர்கள் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திய தோல்விகளின் விளைவாக, இவரது இராணுவத்தில் இருந்த ஆப்கானியர்கள் கிளர்ச்சி செய்தனர். 1000 பஷ்தூன் குதிரை வீரர்கள் சிட்டகொங்கில் அணிவகுத்துச் சென்றனர். கிளர்ச்சியாளர்கள் விரைவில் அடக்கப்பட்டனர். இவர் அவர்களை பதினான்கு கடவுள்களின் பலிபீடத்தில் பலியிட்டார். இந்த மரணங்களால் கலக்கமடைந்த வங்காள சுல்தான், திரிபுரா மீது படையெடுப்பைத் தொடங்கினார். 10,000 காலாட் வீரர்களும் 3000 குதிரைப்படைகளும் இராச்சியத்தைத் தாக்கினா. இதன் விளைவாக சிட்டகொங்கில் எட்டு மாத கால மோதல் நீடித்தது. இருப்பினும், திரிபுரா வெற்றிபெற்றது. வங்காளத் தளபதியும் கடவுள்களுக்குப் பலியிடப்பட்டார். [13] [14]
விஜயன் ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கினார். இவரது படைகள் கிழக்கு வங்காளத்தை ஆழமாக ஊடுருவியது. பிக்ரம்பூரை ஆக்கிரமித்து சோனார்கானைக் கொள்ளையடித்து எரித்து, பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து பத்மா ஆறு வரை தனது 5000 ஆற்றுப்படகுகளை இவர் வழி நடத்தினார். முகலாயப் பேரரசுடனான உள்நாட்டுப் போரால் திசைதிருப்பப்பட்ட சுல்தான், விஜயனை எதிர்க்க முடியாமல், பிந்தையவரை இப்பகுதியின் நிகரற்ற எஜமானராக விட்டுவிட்டார்.[10][8][15]
சமகால ஆட்சியாளர்களுடனான தொடர்புகள்
தொகுமுகலாய பேரரசர் அக்பரின் சமகாலத்தவரான விஜயன், அயினி அக்பரியில் குறிப்பிடுகிறார்.[16][17]}} இவர் ஒடிசாவின் ஆட்சியாளரான முகுந்த தேவனுடன் உறவைப் பேணி வந்ததாகவும் அறியப்படுகிறது. தன்னுடைய மூத்த மகன் துங்கர் பாவின் பராமரிப்பை அவரிடம் ஒப்படைத்தார். [18] வங்காள சுல்தான்களுக்கு எதிராக இந்த இரண்டு மன்னர்களுக்கும் இடையே ஒரு கூட்டணி இருந்திருக்கலாம். [19] இவர் கச்சாரி இராச்சியத்தின் ஆட்சியாளருடனும் தொடர்பு கொண்டிருந்தார்.[20]
இறப்பு
தொகுமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த விஜயன் பொ.ச.1563 இல், தனது நாற்பத்தேழாவது வயதில் பெரியம்மை நோயால் இறந்தார். வழக்கப்படி, இவரது மனைவிகள் இவருடன் உடன்கட்டை ஏறினர். [16][21][22] இவர் இறக்கும் போது, கிழக்கு வங்காளத்தின் முழுப் பகுதியையும், இன்றைய இந்திய மாநிலமான அசாமின் தெற்குப் பகுதியையும் கட்டுப்படுத்தி, திரிபுரா அதன் மிகப்பெரிய அளவை எட்டியிருந்தது. [14] இவரது வெற்றிகள் ராஜ்மாலாவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.[23]
இவருக்குப் பிறகு இவரது மகன் அனந்த மாணிக்கியா பதவியேற்றார். அவர் தனது தந்தையை விட திறமையற்றவராக இருந்தார்.[16] திரிபுரா பின்னர் படிப்படியாக சிதைவை சந்தித்தது.[24]
சான்றுகள்
தொகு- ↑ Choudhury (1986), ப. 134.
- ↑ Raatan (2008), ப. 147–48.
- ↑ 3.0 3.1 Sarma (1987), ப. 63.
- ↑ Sircar (1979), ப. 90.
- ↑ 5.0 5.1 Sarma (1987).
- ↑ Sircar (1979).
- ↑ Sircar (1975).
- ↑ 8.0 8.1 Sarma (1987), ப. 65.
- ↑ Goswami (1996), ப. 51, 118.
- ↑ 10.0 10.1 Guha Thakurta (1999), ப. 8.
- ↑ Bhattacharjee (1991), ப. 73.
- ↑ Guha Thakurta (1999).
- ↑ 13.0 13.1 Chib (1988).
- ↑ 14.0 14.1 Goswami (1996).
- ↑ Chib (1988), ப. 9.
- ↑ 16.0 16.1 16.2 Raatan (2008), ப. 148.
- ↑ Gan-Chaudhuri (1980), ப. 23.
- ↑ Liberman (1992).
- ↑ Roychoudhury (1983).
- ↑ Sarma (1987), ப. 65–66.
- ↑ Sarma (1987), ப. 73.
- ↑ Chatterji (1951), ப. 134.
- ↑ Durlabhendra, Sukheshwar & Baneshwar (1999), ப. 95.
- ↑ Das (1997), ப. 16.
உசாத்துணை
தொகு- Bhattacharjee, Jayanta Bhusan (1991). Social and polity formations in pre-colonial north-east India: the Barak Valley experience. Har-Anand Publications in association with Vikas Pub. House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780706954647.
- Chatterji, Suniti Kumar (1951). Kirata Jana Krti. – The Indo-Mongoloids: Their Contribution to the History and Culture of India. The Asiatic Society.
- Chib, Sukhdev Singh (1988). Tripura. Ess Ess Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7000-039-6.
- Choudhury, Rabin Dev (1986). A Source Book of the Numismatic Studies in North East India. Vol. I. Directorate of Museums, Assam.
- Das, Ratna (1997). Art and Architecture of Tripura. Tribal Research Institute, Government of Tripura.
- Durlabhendra; Sukheshwar; Baneshwar (1999). Sri Rajmala. Translated by Kailāsa Candra Siṃha; N.C. Nath. Agartala: Tribal Research Institute, Govt. of Tripura.
- Gan-Chaudhuri, Jagadis (1980). Tripura, the land and its people. Leeladevi Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121004480.
- Goswami, Debabrata (1996). Military History of Tripura, 1490 to 1947. Agartala: Tripura State Tribal Cultural Research Institute & Museum, Government of Tripura.
- Guha Thakurta, S. N. (1999). India- the land and the people: Tripura. National Book Trust, India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-2542-0.
- Liberman, Kenneth (1992). "Philosophical Debate in the Tibetan Academy". The Tibet Journal (Library of Tibetan Works & Archives.) XVII. https://books.google.com/books?id=8K8MAQAAMAAJ.
- Nath, D. (1989). History of the Koch Kingdom, C. 1515-1615. Delhi: Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-109-0.
- Raatan, T. (2008). Encyclopaedia of North-East India. Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-068-4.
- Roychoudhury, Nalini Ranjan (1983). Tripura through the ages: a short history of Tripura from the earliest times to 1947 A.D. Sterling.
- Sarma, Ramani Mohan (1987). Political History of Tripura. Puthipatra.
- Sircar, Dineshchandra (1975). The Tripura Tradition Tested by Coins and Inscriptions. The Journal of the Numismatic Society of India. Vol. 37. Numismatic Society of India, P.O. Hindu University.
- Sircar, Dineshchandra (1979). Some Epigraphical Records of the Medieval Period from Eastern India. New Delhi: Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-096-9.