கௌட பிரதேசம்

கௌட பிரதேசம் (Gauda Region) (வங்காள மொழி: গৌড়), பண்டைய பரத கண்டத்தின் மற்றும் மத்திய கால வங்காளத்தில் இருந்த பகுதியாகும்.[1][2] கௌடப் பிரதேசம், பண்டைய வங்க நாடு, அங்க நாடு மற்றும் கலிங்க நாடுகளை கொண்டிருந்தது.

அமைவிடமும் விரிவாக்கமும் தொகு

கௌடப் பிரதேசம் வங்க நாடு, பௌண்டர நாடு மற்றும் காமரூப நாடுகளுடன் கூடியது என சாணக்கியர், (கி மு 350–-283) தான் எழுதிய அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் கூறியுள்ளார். இப்புவியியல் கருத்தை பண்டைய நூல்களிலும் தொடர்கிறது. [2]

கி மு 590 முதல் 625 முடிய வங்காளத்தின் முதல் மன்னரான சசாங்கன், கர்ணசுபர்ணா நகரத்தை (தற்கால முர்சிதாபாத்தின் தலைமையிடமான பெஹரம்பூர்) தலைநகராக கொண்டவன். [1]சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங், சசாங்கன் ஆண்ட கர்ணசுபர்ணா நகரத்திலிருந்து தற்கால ஒரிசா பகுதிகளுக்குப் பயணித்தார்.[2] பௌண்டர நாடு கௌடப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தாக பண்டைய இந்து சாத்திரங்கள் கூறுகிறது.[3]

பாலப் பேரரசர்களும், சென் பேரரசர்களும் தங்களை கௌட தேசத்தின் கௌடேஸ்வரர்கள் என அழைத்துக் கொண்டனர்.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, first published 1971, reprint 2005, pp. 5-6, Tulshi Prakashani, Kolkata, ISBN 81-89118-01-3.
  2. 2.0 2.1 2.2 Ghosh, Suchandra. "Gauda". Banglapedia. Asiatic Society of Bangladesh. பார்க்கப்பட்ட நாள் 2009-08-22.
  3. Bandopadhyay, Rakhaldas, Bangalar Itihas, (வங்காள மொழியில்), first published 1928, revised edition 1971, vol I, p 101, Nababharat Publishers, 72 Mahatma Gandhi Road, Kolkata.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌட_பிரதேசம்&oldid=2696776" இலிருந்து மீள்விக்கப்பட்டது