சென் பேரரசு

சென் பேரரசு (வங்காள மொழி: সেন সাম্রাজ্য, Shen Shamrajjo) வடகிழக்கு இந்தியாப் பகுதிகளை, வங்காளத்தை மையமாகக் கொண்டு 11 மற்றும் 12வது நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்துப் பேரரசாகும். பாலப் பேரரசு வீழ்ச்சி அடையும் தருவாயில், வங்காளப் பகுதியின் அதன் ஆளுனர் ஹேமந்த சென் என்பவர் சென் பேரரசு கி. பி 1095இல் அமைய அடித்தளமிட்டார். பேரரசர் ஹேமந்த சென்னின் மறைவிற்குப் பின் வந்த சென் பேரரசர் விஜய் சென் 1096 முதல் 1159 முடிய 60 ஆண்டுகள் சென் பேரரசை ஆண்டார்.

சென் பேரரசு
সেন সাম্রাজ্য
Shen Shamrajjo
கி. பி 1070–கி. பி 1230
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
சென் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசங்கள்
சென் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசங்கள்
தலைநகரம்நவதீப்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
வங்காள மொழி
சமயம்
இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• 1070–1096 AD
ஹேமந்த சென்
• கி. பி 1159 – 1179
பல்லால் சென்
• கி. பி 1225–1230
கேசவ சென்
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் கால அரசுகள்
• தொடக்கம்
கி. பி 1070
• முடிவு
கி. பி 1230
முந்தையது
பின்னையது
[[பாலப் பேரரசு]]
[[தேவப் பேரரசு]]
எடில்பூர் செப்பு பட்டயம்
சென் பேரரசின் காலத்திய நர்த்தன கணபதி சிலை

விஜய் சென்னிற்குப் பின் வந்த பல்லால் சென், பாலப் பேரரசிடமிருந்து கௌர் பகுதியை வென்று கொல்கத்தா கடற்கரையில் நவதீப் என்ற புதிய தலைநகரை நிறுவினான். பல்லால் சென் மேலைச் சாளுக்கியர் அரசின் இளவரசியை மணந்தார்.[1]பல்லால சென் அரசனுக்குப் பின் 1179இல் பட்டமேறிய இலக்குமன சென் பேரரசை இருபது ஆண்டுகள் ஆண்டான். தனது ஆட்சிக் காலத்தில் தற்கால அசாம், ஒடிசா, பிகார் பகுதிகளை கைப்பற்றினான். கி. பி 1203–1204 இல் துருக்கிய படைத்தலைவர் இக்தியார் உத்தீன் முகமது பின் பக்தியார் கில்ஜி சென் பேரரசின் தலைநகர் நவதீப்பை தாக்கினான். போரில் தோற்ற இலட்சுமன சென் வடமேற்கு வங்காளப் பகுதிகளை துருக்கியரிடம் இழந்தான். ஆனால் பேரரசின் மற்ற பகுதிகள் இலட்சுமன சென்னின் கட்டுக்குள் இருந்தது.

கட்டிடக் கலை

தொகு
 
சென் பேரரசர் பல்லால சென் 12ஆம் நூற்றாண்டில் டாக்காவில் நிறுவிய தாகேஸ்வரி கோயில்

வங்காள தேசத்தின் டாக்கா நகரில் அமைந்த தாகேஸ்வரி கோயிலை, 12ஆம் நூற்றாண்டில் சென் வமிச அரசன் பல்லால் சென் கட்டினார். மேலும் காஷ்மீரிலும் பல்லால சென் அரசர் கோயில்களை கட்டினார். [2]

சென் பேரரசுக்குப் பின்னர் வந்த தேவா பேரரசே இந்தியாவின் கிழக்கில் தன்னாட்சி பெற்ற இறுதி இந்துப் பேரரசாகும்.

சென் பேரரசர்கள்

தொகு
 • சமந்த சென்[3]
 • ஹேமந்த சென் (கி. பி 1070–1096 )
 • விஜய் சென் (1095–1158 )
 • பல்லால் சென் (1158–1179 )
 • இலக்குமன சென் (கி. பி 1179–1206)
 • சொரூப் சென் (1206–1225)
 • கேசவ சென் (1225–1230 )

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib by Nitish K. Sengupta p.51
 2. P. 142, Journal of the Asiatic Society of Bengal, Volume 34, Part 1, Issues 1-4, By Asiatic Society of Bengal
 3. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.

Sources

 • Early History of India 3rd and revised edition by Vincent A Smith

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் வங்காள அரச குலம் பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_பேரரசு&oldid=3789462" இலிருந்து மீள்விக்கப்பட்டது