தாகேஸ்வரி தேசிய கோயில்

வங்காளதேசத்தில் டாக்கா தலைநகரிலுள்ள இந்து கோவில்


தாகேஸ்வரி தேசிய கோயில் அல்லது டாக்கேஸ்வரி கோயில் (Dhakeshwari National Temple) வங்கள தேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்த ஒரு இந்து சமயக் கோயில் ஆகும். டாக்கேஸ்வரி கோயில், வங்களா தேச அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தாக்கேஸ்வரி அம்மன், டாக்கா நகரத்தின் காவல் தெய்வம் என்பதால், இங்கு குடிகொண்டுள்ள துர்கைக்கு டாக்கேஸ்வரி என்று பெயராயிற்று. தாக்கேஸ்வரி துர்கை கோயில் வங்கள தேசத்தின் தேசிய கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் துர்கா பூஜை புகழ் பெற்றது.[1][2][3]

தாகேஸ்வரி தேசிய கோயில்
ঢাকেশ্বরী জাতীয় মন্দির
தாகேஸ்வரி, சிவன் கோயில்
ஆள்கூறுகள்:23°43′23″N 90°23′23″E / 23.72306°N 90.38972°E / 23.72306; 90.38972
பெயர்
பெயர்:தாகேஸ்வரி ஜாதிய மந்திர்
Ðhakeshshori Jatio Mondir
வங்காளம்:ঢাকেশ্বরী জাতীয় মন্দির
அமைவிடம்
நாடு:வங்காள தேசம்
மாநிலம்:டாக்கா
மாவட்டம்:டாக்கா மாவட்டம்
அமைவு:டாக்கா
கோயில் தகவல்கள்
மூலவர்:துர்கை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சென் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:12ஆம் நூற்றாண்டு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 7 சூன் 2015 அன்று டாக்காவில் உள்ள டாக்கேஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.[4][5]

வரலாறு

தொகு

டாக்கேஸ்வரி கோயில் 12ஆம் நூற்றாண்டில் சென் வமிச அரசன் பல்லால் சென் (Ballal Sen) என்பவர் டாக்கா நகரத்தின் பெயராலேயே கோயிலுக்கும் டாக்கேஸ்வரி கோயில் எனப் பெயரிட்டு, சென் கட்டிடக் கலையில் கோயில் கட்டினார். இக்கோயில் வங்காளத்தின் கலாசார பண்பாட்டின் மையமாக அமைந்தது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக தாக்கேஸ்வரி கோயில் கருதப்படுகிறது. கோயில் கருவறையில் இருந்த பத்துக் கரங்களை உடைய தாக்கேஸ்வரி அம்மனின் திருவுருவச் சிலை, 1947ஆம் ஆண்டில் கொல்கத்தா அருகில் உள்ள குமார்துலி (Kumartuli) என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் நிர்மாணிக்கப்பட்ட துர்க்கை சிலை 1971 ஆம் ஆண்டில் நடந்த வங்காளதேச விடுதலைப் போரின் போது, பாகிஸ்தானிய இராணுவத்தால் அழிக்கப்பட்டது. தாக்கேஸ்வரி அம்மன் கோயில் கருவறையில் உள்ள அம்மனின் நகல் உருவச்சிலையும், 1989 – 1990ஆம் ஆண்டில் நிகழ்ந்த மதக் கலவரத்தில் இசுலாமியர்களால் சிதைக்கப்பட்டது.

கோயிலின் சிறப்பு நாட்கள்

தொகு

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.bangladesh.com/sights/dhakeshwari/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
  3. http://www.dinamani.com/world/2015/05/17/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article2818147.ece
  4. "வங்கதேசத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த மோடி". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2015-06-09.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகேஸ்வரி_தேசிய_கோயில்&oldid=4055814" இலிருந்து மீள்விக்கப்பட்டது