அனாவ், துர்க்மெனிஸ்தான்
அனாவ் ( Anau அல்லது Annau) என்பது துர்க்மெனிஸ்தானில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அஹால் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது அசுகாபாத்தின் தென்கிழக்கில் 8. கி.மீ. தொலைவில் எம் 37 நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளது.
அனாவ்
Änew | |
---|---|
ஆள்கூறுகள்: 37°53′N 58°32′E / 37.883°N 58.533°E | |
நாடு | துருக்மெனிஸ்தான் |
மாகாணம் | அஹால் மாகாணம் |
மக்கள்தொகை (1989 மக்கள் கணக்கெடுப்பு)[1] | |
• மொத்தம் | 30,000 |
அனாவ் என்பது பாரசீக Âbe nav (آب نو) பாரசீக மொழிச் சொல்லாகும். இதன் பொருள் "புதிய நீர்" என்பதாகும். [1]
2003 ஆம் ஆண்டில், நகரில் ஒரு புதிய விளையாடரங்கம் உருவாக்கபட்டது. 2005 ஆம் ஆண்டில் 'அக் புக்டே (வெள்ளை கோதுமை) அருங்காட்சியகம்' என்று அழைக்கப்படும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. [2]
தொல்லியல்
தொகுதெற்கு துர்க்மெனிஸ்தானின் கலாச்சார வரிசையில் புதிய கற்கால ஜீதுன் கலாச்சாரத்தைத் தொடர்ந்து, சால்கோலிதிக் அனாவ் கலாச்சாரம் கிமு 4500 க்கு முற்பட்ட காலத்தில் நிலவியது. [3]
1990 மற்றும் 2000 களில் துர்க்மென்-அமெரிக்க கூட்டு தொல்லியல் ஆய்வு மூலம் அனாவ் அகழப்பட்டது. [4]
அனாவ் பண்டைய பட்டுச் சாலையில் ஒரு தங்குமிடமாக இருந்தது. நன்றாக வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள் இங்கே கிடைக்கபெற்றன.
குறிப்புகள்
தொகு- ↑ Population census 2017 பரணிடப்பட்டது 2012-01-18 at the வந்தவழி இயந்திரம், Demoscope Weekly, No. 359-360, 1–18 January 2009 (search for Туркменская ССР) (in உருசிய மொழி)
- ↑ Picture of Museum, at the site where the earliest settlement was located - pinterest.com
- ↑ Kurbanov, Aydogdy (2018-09-14). "A brief history of archaeological research in Turkmenistan from the beginning of the 20th century until the present". ArchéOrient-Le Blog (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-05-23.
- ↑ AYDOGDY KURBANOV (2018), A brief history of archaeological research in Turkmenistan from the beginning of the 20th century until the present.