அனிச்சை செயலியல்

அனிச்சைச் செயலியல் (reflexology)(மண்டல சிகிச்சை என்றும் அழைக்கப்படும்) என்பது கால்கள், கைகளின் பகுதிகளில் அல்லது குறிப்பிடப்பட்ட புள்ளிகளில் எண்ணெய்கள், குழைமங்களை பயன்படுத்தாமல் விரல்களினாலும், கை நுட்பங்களினாலும் அழுத்தத்தை பிரயோகித்து வழங்கப்படும் மாற்று சிகிச்சை முறையாகும். அனிச்சைச் செயலியலானது உடலின் ஒவ்வொரு பகுதியும் கைகளிலும் கால்களிலும் குறிக்கப்படுவதாகவும், கைகள் அல்லது கால்களில் குறிப்பிட்ட பகுதிகளை அழுத்தினால் உடலின் மற்ற பகுதிகளிலும் சிகிச்சை விளைவுகள் ஏற்படக்கூடும் என்ற போலி அறிவியலை அடிப்படையாக கொண்டது.[1][2]

அனிச்சை செயலியலில் உடலின் "மண்டலங்களில்" உள்ள உறுப்புகளுடன் ஒத்துப்போகும் என்று நம்பப்படுகின்ற கால்களின் பகுதிகளின் வரைபடம்

எந்தவொரு மருத்துவ நிலைமைகளுக்கும்  அனிச்சைச் செயலியல் சிகிச்சை முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.[3]

வரையறை

தொகு

கோக்ரேன் ஒத்துழைப்பு மதிப்பாய்வில் "ரிஃப்ளெக்சாலஜி என்பது உடலில் வேறு பகுதிகளில் விளைவை ஏற்படுத்த பாதத்தின் சில பகுதிகளை அழுத்துவது." என்பதாக வரையறுக்கப்படுகின்றது.[4]

மதிப்பீடு

தொகு

2015 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அரசாங்கத்தின் சுகாதாரத் துறை மாற்று சிகிச்சைகள் பற்றிய மதிப்பீட்டின் முடிவுகளை வெளியிட்டது. மதிப்பிடப்பட்ட 17 சிகிச்சைகளில்  அனிச்சைச் செயலியலும் ஒன்றாகும்.[5] 2017 ஆம் ஆண்டில், ஆத்திரேலிய அரசாங்கத்தினால் காப்பீட்டு மானியத்திற்கு தகுதி பெறாத நடைமுறையாக ரிஃப்ளெக்சாலஜி மதிப்பிடப்பட்டது. [6]

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளின் மதிப்புரைகள் எந்தவொரு மருத்துவ நிலைக்கும்  அனிச்சைச் செயலியலை பயன்படுத்துவதை ஆதரிக்க போதுமான ஆதாரங்களைக் கண்டறியவில்லை.[3]

உரிமை கோரப்பட்ட வழிமுறை

தொகு

அனிச்சைச் செயலியல் சிகிச்சையை எவ்வாறு  செயற்படுத்த வேண்டும் என்பதில் இச் சிகிச்சை நிபுணர்கள் மத்தியில் கருத்து  வேறுபாடு நிலவுகின்றது. ஆனால் இவர்கள் காலில் உள்ள பகுதிகள் உடலின் பகுதிகளுக்கு ஒத்திருக்கின்றன எனவும் இவற்றைக் கையாளுவதன் மூலம் ஒருவரின்  ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று கருதுகின்றனர்.  அனிச்சைச் செயலியல் சிகிச்சை நிபுணர்கள் உடலை பத்து சம செங்குத்து மண்டலங்களாக, வலதுபுறத்தில் ஐந்து மண்டலங்களும் மற்றும் இடதுபுறத்தில் ஐந்து மண்டலங்களுமாக பிரிக்கிறார்கள்.[7]தீவிரமான நோய் நிலைமைகளுக்கு  மறிவினையியல் மூலம் சிகிச்சையளிப்பது, பொருத்தமான மருத்துவ சிகிச்சையை நாடுவதை தாமதப்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.[8]

உடலில் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் அல்லது ஆற்றல் புலங்கள் தடுக்கப்படும்போது, ​​நோய் ஏற்படலாம் என்றும்  அனிச்சைச் செயலியல் மூலம் பாதத்தை தூண்டுவதால் காலில் பெறப்பட்ட அழுத்தம் நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தும் சமிக்ஞைகளை அனுப்பலாம் அல்லது உடலில் இயற்கையான வலி நிவாரணிகளான எண்டோர்பின்களை வெளியிடப்பட்டு அவை குணப்படுத்துவதை ஊக்குவிக்கலாம்  என்று  அனிச்சைச் செயலியல் சிகிச்சை நிபுணர்கள் கருதுகின்றனர்.  இந்த கருதுகோள்கள் எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் மருத்துவ சமூகம் இக் கோட்பாடுகளை நிராகரிக்கிறது. அனிச்சைச் செயலியலில் கூறப்படும் ‘குய்’ எனும் உடலில் உயிர் ஆற்றலுக்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.[1]

 
அனிச்சை செயலியலில் உடலின் "மண்டலங்களில்" உள்ள உறுப்புகளுடன் ஒத்திருப்பதாக நம்பப்படும் கையின் பகுதிகள்

ஒழுங்குமுறை

தொகு

டென்மார்க்கில் அதிகம் பயன்படுத்தப்படும் மாற்று சிகிச்சைகளில்  அனிச்சைச் செயலியலும் ஒன்றாகும். 2005 ஆம் ஆண்டின் ஒரு தேசிய கணக்கெடுப்பில் டேனிஷ் மக்களில் 21.4% பேர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில்  அனிச்சைச் செயலியலை மேற்கொண்டதாகவும் , 6.1% பேர் முந்தைய வருடத்திற்குள் மேற்கொண்டதாகவும் தெரியவந்தது. [9]2007 ஆம் ஆண்டில் நோர்வே மக்கள்தொகையில் 5.6% பேர் கடந்த 12 மாதங்களுக்குள்  அனிச்சைச் செயலியலை பயன்படுத்தியதாக நோர்வேயில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. [10]

வரலாறு

தொகு

சீனா மற்றும் எகிப்தின் வரலாறுகளிலும் அனிச்சைச் செயலியலுக்கு ஒத்த நுட்பங்கள் நடைமுறைபடுத்தப்  பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன[11]. "மண்டல சிகிச்சை" என்று அழைக்கப்படும் நுட்பம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வில்லியம் ஃபிட்ஸ்ஜெரால்ட் , எட்வின் எஃப். போவர்ஸ் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. டாக்டர் ஃபிட்ஸ்ஜெரால்ட் மருத்துவ நிலைமைகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க பாதத்தின் வரைபடங்களைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.[12][13]அவர் உடலை 10 மண்டலங்களாகப் பிரித்து, பாதத்துடன்  தொடர்புடைய பாகங்கள் என்று பெயரிட்டார். காலில் மென்மையான அழுத்தம் தொடர்புடைய மண்டலத்திற்கு நிவாரணம் தரும் என்று அவர் முன்மொழிந்தார். 1930 களில்,  பிசியோதெரபிஸ்ட்டான யூனிஸ் இங்காம்[14] கால்களும் கைகளும் குறிப்பாக உணர்திறன் உடையவை என்று கூறியதுடன், முழு உடலையும் பாதத்துடன் தொடர்பு படுத்தி வரைபடமாக்கி "மண்டல சிகிச்சை" என்பதை அனிச்சைச் செயலியல் (ரிஃப்ளெக்சாலஜி) என மறுபெயரிட்டார்.[15]

நவீன  அனிச்சைச் செயலியல் நிபுணர்கள் இங்காமின் முறைகள் அல்லது ரிஃப்ளெக்சாலஜிஸ்ட் லாரா நார்மன் உருவாக்கிய ஒத்த நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Reflexology: A Close Look". www.quackwatch.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  2. Kunz, Kevin; Kunz, Barbara (1993). The Complete Guide to Foot Reflexology. Reflexology Research Project.
  3. 3.0 3.1 Ernst E (2009). "Is reflexology an effective intervention? A systematic review of randomised controlled trials". Med J Aust. 191 (5): 263–6. PMID 19740047
  4. "Massage, reflexology and other manual methods for managing pain in labour". www.cochrane.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  5. "Massage, reflexology and other manual methods for managing pain in labour". www.cochrane.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  6. "Homeopathy, naturopathy struck off private insurance list". AJP (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2017-10-17. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  7. 7.0 7.1 "InteliHealth:". web.archive.org. 2012-02-21. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  8. "Reflexology". www.ncahf.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  9. "Reflexology in Denmark". Archived from the original on 2012-04-04.
  10. "Domeneshop". domene.shop (in நார்வேஜியன்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  11. "InteliHealth:". web.archive.org. 2012-02-21. Archived from the original on 2012-02-21. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  12. Norman, Laura; Thomas Cowan (1989). The Reflexology Handbook, A Complete Guide. Piatkus. p. 17. ISBN 0-86188-912-6.
  13. Fitzgerald, William H.; Bowers, Edwin F. (1917) Zone therapy; or, Relieving pain at home. Columbus, Ohio: I. W. Long, Publisher (California Digital Library) Accessed Jan. 2015
  14. Benjamin, Patricia (1989). "Eunice D. Ingham and the development of foot reflexology in the U.S". American Massage Therapy Journal.
  15. "Complementary and Alternative Medicine | American Cancer Society". www.cancer.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிச்சை_செயலியல்&oldid=3586041" இலிருந்து மீள்விக்கப்பட்டது