அனிதா உதீப்

இந்திய திரைப்பட இயக்குநர்

அனிதா உதீப் (Anita Udeep) என்பவர் ஒரு இந்திய திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். [1]

அனிதா உதீப்
பிறப்புஅனிதா சந்திரசேகரன்
1978
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போதுவரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்"அழகிய அசுரா"

தொழில் தொகு

பென்டாஃபோர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடரமண சந்திரசேகரனின் மகளான அனிதா, முதலில் சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பைப் படித்தார். பின்னர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் இருந்த காலத்தில், அனிதா பிளவரி தோர்ன் மற்றும் ஓம் போன்ற குறும்படங்களை உருவாக்கினார். அதே நேரத்தில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் டேக்கன் (2002) என்ற அறிவியல் புனைகதை குறுந்தொடர்களில் பயிற்சியாளராகப் பணியாற்றினார். [2] அனிதா இந்தியத் திரையுலகில் பணிபுரிய மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு துவக்கத்தில் தமிழ்த் திரைப்படப் பின்னணிம் பாடகியாகப் பணியாற்றினார். இவரது துவக்ககால பாடல்களில் டி. இமானின் தமிழ் தீநெறிக்காட்சிப் படமான விசில் (2003) படத்தில் இடம்பெற்ற " அழகிய அசுரா " பாடல் அடங்கும். அதே நேரத்தில் இவர் முகங்கள் என்ற பாப் பாடல் தொகுப்பிலும் பங்களித்தார். [3]

2003 இல் அனிதா தன் 25 வயதில் தன் முதல் திரைப்படத்தை இயக்கும் பணியில் இறங்கினார். அதன்பிறகு N-Viz என்டர்டெயின்மென்ட் மற்றும் பென்டமீடியா குழுமத்திற்காக நாக், நாக், ஐ ஆம் லுக்கிங் டு மேரி என்ற ஆங்கிலத் திரைப்படத்தை உருவாக்கினார். புதுமுக நடிகர்களான சுஹாஸ் அஹுஜா மற்றும் ரதி ஆறுமுகம் ஆகியோர் முக்கிய வேடங்களில் அப்படத்தில் நடித்தனர். இப்படத்தை ஒளிப்பதிவாளர் பிரீத்தா ஜெயராமன் மற்றும் இசையமைப்பாளர் மகேஷ் சங்கர் உள்ளிட்ட இளம் குழுவினரால் உருவாக்கப்பட்டது. [3] [4] பின்னர் இவர் தன் தந்தையின் தயாரிப்பு நிறுவனத்திற்காக கல்லிவர்ஸ் டிராவல் என்ற இயங்குபட திரைப்படத்தை இயக்கினார். [5] [6]

அனிதா தனது தந்தையின் சென்னையில் பலதிரைகள் கொண்ட திரையரங்கான மாயாஜால் திரையரங்கை நிர்வகிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் தனது ஆர்வத்தைத் தொடர்ந்தார். கல்லூரி நாடகப் படமான குளிர் 100° (2009) திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் சஞ்சீவ் மற்றும் ரியா பாம்னியால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். [7] [8] இந்தப் படத்திற்காக, இவர் என்விஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் ஊட்டியில் உள்ள பணக்கார கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு கதையை உருவாக்கினார். [9] படத்தின் பிரபலமான இசைப் பாடல்கள் காரணமாக வெளியீட்டிற்கு முன்பே படம் விளம்பரத்தைப் பெற்ற போதிலும். படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. மேலும் வணிக ரீதியாக நன்றாக போகவில்லை. [10] [11]

அனிதா பின்னர் நடிகை ஓவியாவுடன் இணைந்து 90 எம்எல் (2019) படத்திற்காக பணியாற்றினார். இது தமிழ்த் திரைப்படத் துறையில் வரலாற்று ரீதியாக தடைசெய்யப்பட்ட அம்சங்களைக் கையாண்டதற்காக வெளியீடுக்கு முன்பே விளம்பரம் பெற்றது. [12] [13] [14]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அனிதா ஸ்பிளாஸ் தொலைக்காட்சி அலைவரிசையின் தலைமை செயல் அதிகாரியான உதீப்பை மணந்தார். [3]

திரைப்படவியல் தொகு

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2003 நாக், நாக், ஐ ஆம் லுக்கிங் டு மேரி ஆங்கிலம்
2003 கல்லிவர்ஸ் டிராவல் ஆங்கிலம்
2009 குளிர் 100° தமிழ்
2019 90 எம்எல் தமிழ்

இசைத்தொகுப்பு தொகு

ஆண்டு திரைப்படம் மொழி பாடல் குறிப்புகள்
2003 விசில் தமிழ் " அழகிய அசுரா "
2004 மீசை மாதவன் தமிழ் "வாடா வாடா"
2005 தகதிமிதா தமிழ் "ராயலசீமா ராணி"
2019 90 எம்எல் தமிழ் "சிவபாணம்"

மேற்கோள்கள் தொகு

  1. "90ML director blasts producer Dhananjayan: Dear Uncle, yes it is an adult film". India Today. Ist. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/90ml-director-blasts-producer-dhananjayan-dear-uncle-yes-it-is-an-adult-film-1469814-2019-03-04. 
  2. "Indian cinema showcase - Knock Knock I am looking to marry - Anita Udeep - Radhi, Suhaas Ahuja". www.idlebrain.com.
  3. 3.0 3.1 3.2 "Film forays". The Hindu. 30 December 2003. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/film-forays/article28460107.ece. 
  4. "Preetha: It was a new experience shooting a food film". https://www.rediff.com/movies/report/slide-show-1-preetha-it-was-a-new-experience-shooting-a-food-film/20140610.htm. 
  5. "Target: Generation X".
  6. "Wallace and Gromit vie for Oscar glory". https://www.theguardian.com/film/2005/nov/18/news. 
  7. "Mayajaal multiplex". சிஃபி. Archived from the original on 2019-11-03.
  8. "South Scope March 2010 Issue Side - B". Issuu.
  9. "There is no sexual content in Kulir 100 Degrees". Rediff.
  10. "'Kulir 100': same old drill, avoidable (Tamil Film Review)". சிஃபி. Archived from the original on 2019-11-03.
  11. "A passionate kiss in Kulir 100 Degree!". சிஃபி. Archived from the original on 2019-11-03.
  12. Usha, P. T. (7 March 2019). "90 ML filmmaker Anita talks about what she tried to tell through her movie".
  13. "'Why can't a woman express lust, is she a tree?': '90ML' director Anita Udeep to TNM". 4 March 2019.
  14. "90 ML director Anita Udeep on dealing with trolls, criticism from film fraternity, and Simbu, Oviya's response". Firstpost. 7 March 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_உதீப்&oldid=3903620" இலிருந்து மீள்விக்கப்பட்டது