அனிதா பால்துரை
அனிதா பால்துரை (Anitha Pauldurai) (பிறப்பு 22 ஜூன் 1985, சென்னை , தமிழ்நாடு) இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்தாட்ட வீரர் மற்றும் இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் தலைவராவார். அனிதா எட்டு ஆசிய கூடைப்பந்து கூட்டமைப்பு (ஏபிசி) சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியப் பெண்மணி ஆவார். இவர், பிரசாந்தி சிங்குடன் சேர்ந்து முதல் நான்கு ஏ (கிரேடு: எலைட்) இடங்களில் முதலிடம் வகிக்கும் முதல் இந்திய கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக உள்ளார்.
அனிதா பால்துரை | |
---|---|
பிறப்பு | 22 சூன் 1985 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
உயரம் | 5 ft 7 in (1.73 m) |
போட்டிகள்
தொகு2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாய்லாந்தில் சர்வதேச தொழில்சார் லீக் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனிதா ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டு 2006 மற்றும் ஆசிய விளையாட்டு 2010 போன்ற பெரிய போட்டிகள் உட்பட பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பதக்கங்கள்
தொகுஅனிதா பால்துரை 2013இல் தோகாவில் நடைபெற்ற, முதல் மூன்று ஃபிபா ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபெற்று, தங்கப்பதக்கம் வென்றார். இவர், 2012இல், சீனாவின் ஹையானில் நடைபெற்ற 3 வது ஆசிய கடற்கரை விளையாட்டுகளில் பங்குபெற்று, தங்கப்பதக்கம் பெற்றார். 2011இல் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கடற்கரை ஆட்டங்களில் அணியின் தலைவராக பங்குபெற்று தங்கப்பதக்கம் பெற்றார். 2009இல் வியட்நாமில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.[1][2] அனிதா, தேசிய விளையாட்டுகளில் 10 தங்கப் பதக்கத்தையும், 2 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் மற்றும் ஃபெடரேஷன் கோப்பை, ஜூனியர் மற்றும் யூத் நேஷனைல் 11 பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசென்னை குடியிருப்பாளரான அனிதா பால்துரை, தனது 11வது வயதில் கூடைப்பந்து விளையாடத் தொடங்கினார். ஆனால் ஆரம்பத்தில், "தான் இவ்விளையாட்டின் ரசிகர் அல்ல" என்பதை ஒப்புக்கொள்கிறார். தான் ஆரம்பத்தில் கைப்பந்து மற்றும் தடகள விளையாட்டுகளை அதிகமாக விளையாடியதாகவும், பள்ளியில் படிக்கும்போது, கூடைப்பந்து பயிற்சியாளர், இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்க்க பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார். கூடைப்பந்து விளையாட ஆரம்பித்ததும், அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம் பெற்றுள்ளார். இவர் தெற்கு ரயில்வேயில் 2003இல் சேர்ந்தார், தற்போது தலைமை பயணச்சீட்டு கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.
விருதுகள்
தொகுஅனிதாவிற்கு 2021ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Geethu Anna Jose and Anitha Paul Durai played in Thailand professional basketball league". 2012-08-18. https://www.sportskeeda.com/basketball/geethu-anna-jose-and-anitha-paul-durai-played-in-thailand-professional-basketball-league.
- ↑ "I love playing for Tamil Nadu: Anitha". 2013-02-02. http://www.thehindu.com/todays-paper/tp-sports/i-love-playing-for-tamil-nadu-anitha/article4370973.ece.
- ↑ https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/padma-award-playing-a-team-sport-makes-it-more-special-anitha-pauldurai/articleshow/80473421.cms