அனிலின் அசிட்டேட்டு சோதனை

அனிலின் அசிட்டேட்டு சோதனை என்பது சில குறிப்பிட்ட கார்போவைதரேட்டுகளை அடையாளம் காணப் பயன்படும் ஒரு வேதிச் சோதனை ஆகும்.  இந்த  கார்போவைதரேட்டுகள்  ஐதரோகுளோரிக் காடியினால் பர்பியூராலாக மாற்றப்பட்டு அவை அனிலின் அசிட்டேட்டுடன் வினை புரிந்து பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தைத் தருகின்றன.

அனிலின் அசிட்டேட்டு சோதனை
வகுப்புநிற அளவை முறை
பகுப்பாய்வுக் கூறுகள்பென்டோசுகள்

செய்முறை மற்றும் வினைவழிமுறை தொகு

ஒரு உலர் மாதிரியானது, சிறிற அளவு ஐதரோகுளோரிக் காடியில் கரைக்கப்பட்டு பின்னர் அளவாக வெப்பப்படுத்தப்படுகிறது. முன்னதாக அனிலின் அசிட்டேட்டினால் நிறைவிக்கப்பட்ட ஒரு காகிதத்துண்டானது மாதிரியின் கரைசலிலிருந்து வெளிவரும் ஆவியில் காட்டப்படுகிறது. ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறம் கிடைக்கப் பெற்றால் அது பென்டோசுகளின் இருப்பிற்கான நேர்மறை முடிவாகும்.

 
பர்பியூரால்

ஐதரோகுளோரிக் அமிலமானது பென்டோசுகளை (5 கரியணுக்களைக் கொண்ட சர்க்கரைகள்) நீர் நீக்கம் செய்து பர்பியூராலைத் தருகின்றது. பர்பியூராலுடன் அனிலினின் வினையானது ஒரு பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தைத் தருகிறது. ஆறு கார்பன் அணுக்களைக் கொண்ட எக்சோசுகள் பர்பியூராலாக நீர் நீக்க வினைக்கு உட்பட்டு பர்பியூராலைத் தருவதில்லை.  ஆகவே,  அவை  இளஞ்சிவப்பு நிறத்தைத் தருவதுமில்லை.

குறுக்கீட்டு விளைவுகள் தொகு

3-பர்பியூரால்டிகைடு வழக்கமான ஆல்டிகைடுகளுக்கான சோதனைகளுக்குத் துலங்கலைத் தருகின்றன. ஆனால்,  2-பர்பியூரால்டிகைடுகளைப் போலல்லாமல், இது அனிலின் அசிட்டேட்டுடன் நிறமேதும் தருவதில்லை.

மேற்கோள்கள் தொகு

  • A Method for the identification of pure organic compounds by a systematic analytical procedure based on physical properties and chemical reactions. v. 1, 1911. By Samuel Parsons Mulliken. Published by J. Wiley & Sons, Inc., 1904. Google Books link page 33.
  • "Modifications of the aniline acetate-furfural method for the determination of pentose." The Analyst, 1956, 81, 598 - 601, எஆசு:10.1039/AN9568100598 [1]