அனில் குமாரி மல்கோத்ரா

இந்திய ஓமியோபதி மருத்துவர்

அனில் குமாரி மல்கோத்ரா (Anil Kumari Malhotra) என்பவர் ஓர் இந்திய ஓமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த நேரு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றினார்.[1] அலகாபாத்திலுள்ள சிறீ சாய்நாத் ஓமியோபதி முதுகலை கல்வி நிறுவனத்தில் தன்னுடைய ஓமியோபதி மருத்துவ மேற்படிப்பை 2006 ஆம் ஆண்டு முடித்தார்.[2] 2007 ஆம் ஆண்டு ஆகத்து ஓன்றாம் தேதி முதல் நேரு மருத்துவ கல்லூரியின் முதல்வராக மல்கோத்ரா பணியாற்றினார்.[3] பல மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதால் அனில் குமாரி நன்கு அறியப்படுகிறார்.[4] இவருடைய மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை விவரிக்கும் விதமாக பல்வேறு மருத்துவ பட்டறைகளை நடத்தினார்.[5][6] பல்வேறு மருத்துவக் கல்வித் திட்டங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்றார்.[7] அனில் குமாரியின் மருத்துவ பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய நான்காவது குடிமக்கள் விருதான பத்மசீறீ விருது 2016 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.[2]

அனில் குமாரி மல்கோத்ரா
Anil Kumari Malhotra
பிறப்புஇந்தியா
பணிஓமியோபதி மருத்துவர்
அறியப்படுவதுஓமியோபதி
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள் தொகு

  1. "Nehru Homoeopathic Medical College & Hospital". Delhi University. 2016. Archived from the original on 4 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 3 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "About the College :". Delhi Homoeo. 2016. Archived from the original on 28 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  4. "Scope of Homeopathy in Thrombocytopenia". B. Jain Group of Companies. 1 April 2011. Archived from the original on 27 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Singer, archer, surgeon and more: Meet India's Padma awardees". Hindustan Times. 26 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  6. Anil Kumari Malhotra (2007). "Homoeopathy for Healthy mother & Happy child Ante-natal complaints". Presentation. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  7. "Birth Anniversary Celebrations of Dr.Samuel Hahnemann". Homoeo Times. 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_குமாரி_மல்கோத்ரா&oldid=3664887" இலிருந்து மீள்விக்கப்பட்டது