அனீலசீன்
அனீலசீன் (Anilazine) என்பது C9H5Cl3N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பயிர்கள் மீது பயன்படுத்தப்பட்டும் ஒரு பூச்சிக்கொல்லியாகும். நைட்ரசன் அணுவைக் கொண்ட பல்லின வளையச் சேர்மமான மூவசீன் பூஞ்சைக்கொல்லி என்று வகைப்படுத்தப்படுகிறது. புல்வெளிகள், தரைப்பகுதிகள், தானியங்ங்கள், காப்பி,பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் பலவகையான பயிர்களைத் தாக்கும் பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த அனீலசீன் பயன்படுத்தப்படுகிறது. இவைதவிர உருளைக்கிழங்கு மற்றும் தக்காளிப் பயிர்களின் இலைப்புள்ளி நோயையும் கட்டுப்படுத்துகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4,6-டைகுளோரோ-N-(2-குளோரோபீனைல்)-1,3,5-டிரையசீன்-2-அமைன்
| |
வேறு பெயர்கள்
அனீலசீன்(ஈரரீன்);
| |
இனங்காட்டிகள் | |
101-05-3 | |
ChEMBL | ChEMBL464135 |
ChemSpider | 7260 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18935 |
| |
பண்புகள் | |
C9H5Cl3N4 | |
தோற்றம் | வெண்மை மற்றும் இளம் பழுப்பு நிற தூள் அல்லது படிகங்கள் |
அடர்த்தி | 1.611 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 232.2 °C (450.0 °F; 505.3 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நச்சுத்தன்மை
தொகுஎலிகள் மற்றும் பூனைகளுக்கு வாய்வழியாகப் புகட்டும் போது பொதுவாக அவற்றிற்கு முறையே வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை உண்டாக்குகிறது. முயல்களின் தோல்மீது படச்செய்த போது அவற்றிற்கு இலேசான தோல் எரிச்சலும் தொடர்ந்து வீக்கம் மற்றும் சிவந்துபோதல் முதலியன ஏற்பட்டன. மற்ற வழிகள் மூலமாக அனீலசீன் ஏற்படுத்தும் பாதிப்பை விட ஊசி மூலம் செலுத்துவது அதிக நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1