அனுகோள் அனல் மின் நிலையம்

அனுகோள் அனல் மின் நிலையம் (Angul Thermal Power Station) இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் அனுகோள் மாவட்டத்தில் தெராங் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. நிலக்கரியை எரிக்கும் போது கிடைக்கும் வெப்பத்தைக் கொண்டு இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிலையங்களை இந்தியாவில் நிறுவும் இயிந்தால் இந்தியா அனல்மின் நிறுவனம் அமைத்துள்ள நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் அனுகோள் அனல் மின் நிலையமும் ஒன்றாகும்.

மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மகாநதி நிலக்கரிபுலம் நிறுவனமும், 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிராகமணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாமல் குறுக்கணை தேவையான தண்ணிரையும் அனுகோள் அனல் மின் நிலையத்திற்கு வழங்குகின்றன[1]

இம்மின்னுற்பத்தி திட்டத்திற்கு பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக பாரத மிகுமின் நிறுவனம் செயல்படுகிறது.

கொள்திறன்

தொகு

1200 மெகாவாட் கொள்திறன் (2X600 மெ.வா) அளவுள்ள மின்னுற்பத்தி நிலையமாக அனுகோள் அனல் மின் நிலையம் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. அனுகோள் நிலை1 திட்டத்தின் நீட்சியாக 600 மெ.வா கொள்திறன் கொண்ட மூன்றாவது அலகு அமைக்கும் திட்டமும் இருக்கிறது. இவற்றை தவிர 2x660 மெ.வா கொள்திறன் கொண்ட புதிய இரண்டு அலகுகள் நிறுவும் திட்டம், அனுகோள் நிலை 2 திட்டம் என்ற பெயரில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் அங்கீகாரத்திற்காக இத்திட்டம் காத்திருக்கிறது.

நிலை அலகு எண் கொள்திறன் (மெ.வா) துவக்கம் தற்போதைய நிலை
அனுகோள்-1 1 600 2014 மே செயல்படுகிறது [2]
அனுகோள்-1 2 600 2015 சனவரி செயல்படுகிறது [3]

மேற்கோள்கள்

தொகு