அனுசுயாபாய் காலே

இந்திய அரசியல்வாதி

அனுசுயாபாய் காலே (Anasuyabai Kale) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா், 1952ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவைக்கு, நாக்பூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னா் இவர் இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினராக 1957ஆம் ஆண்டில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், காலே மத்திய மாகாணங்கள் மற்றும் பேரர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1928 ஆம் ஆண்டில் இதற்காக பரிந்துரைக்கப்பட்டார்.பின்பு, இவர் 1937ஆம் ஆண்டில் மத்திய மாகாண சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.[1] 1948இல், இவர் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவராக இருந்தார்.[3]

அனுசுயாபாய் காலே
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை இந்தியா மக்களவை
பதவியில்
1952–1959
பின்னவர்மாதவ் சிறீஹரி அனய்
தொகுதிநாக்பூர் மக்களவைத் தொகுதி நாக்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்புருஷோத்தம் பாலகிருஷ்ண காலே
பிள்ளைகள்3 மகன்களும், 2 மகள்களும்

இவர், ஆந்த் மாநில திவானின் வழித்தோன்றல் ஆவார். இவர் நாசிக், வாகேரின் காலேவின் கிளையில் திருமணம் செய்து கொண்டார். இவர் புனேயில் ஹுஜூர் பாகா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தாா். பின்பு, புனே பெர்க்குசன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் வடோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தாா். இவர் புருஷோத்தம் பாலகிருஷ்ணா காலே என்பவரை மணந்தார். இவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[1] 1957 ஆம் ஆண்டில் நாக்பூரிலிருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இடைக்காலத்தில் இறந்தார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Anasuyabai Kale Profile". Lok Sabha. Archived from the original on 8 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.
  2. S.R. Bakshi And O.P. Ralhan (2008). Madhya Pradesh Through the Ages. Sarup & Sons. பக். 68–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-806-7. https://books.google.com/books?id=Bt1XStNgHeEC&pg=PA68. பார்த்த நாள்: 2016-06-14. 
  3. "Past Presidents". All India Women's Conference. Archived from the original on 9 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசுயாபாய்_காலே&oldid=3196157" இலிருந்து மீள்விக்கப்பட்டது