அனுப் சிங் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

அனுப் சிங் (Anup Singh (politician) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1903 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.ர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அனுப் சிங் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 3 ஏப்ரல் 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரை, 3 ஏப்ரல் 1954 முதல் 2 ஏப்ரல் 1960 வரை, 3 ஏப்ரல் 1962 முதல் 22 நவம்பர் 1962 வரை மற்றும் 3 ஏப்ரல் 1964 முதல் 28 ஜனவரி 1969 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்..

1960 ஆம் ஆண்டுகளில் இவர் பஞ்சாப் பொது சேவை ஆணையத்தின் தலைவராக இருந்தார். நேரு இந்தியாவின் வளரும் நட்சத்திரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

இவருக்கு சிறீமதி இக்பால் கவுர் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். [1] 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதியன்று அனுப் சிங் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajya Sabha Members' Biographical Sketches 1952 - 2003" (PDF). Rajya Sabha Secretariat, Parliament House, New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுப்_சிங்_(அரசியல்வாதி)&oldid=3816527" இலிருந்து மீள்விக்கப்பட்டது