அனுராதபுர கிராமிய நூதனசாலை
அனுராதபுர கிராமிய நூதனசாலை[1] அல்லது அனுராதபுர கிராமிய அருங்காட்சியகம் என்பது இலங்கையில் உள்ள கிராமிய நூதனசாலை ஒன்றாகும். அனுராதபுரத் தொல்பொருள் அருங்காட்சியகத்தின் அருகில் இது அமைந்துள்ளது. ஆகத்து 22, 1971 அன்ரு இந்நூதனசாலை ஸ்தாபிக்கப்பட்டது.[2]
நிறுவப்பட்டது | ஆகத்து 22, 1971 |
---|---|
அமைவிடம் | அனுராதபுரம், இலங்கை |
ஆள்கூற்று | 8°12′21″N 80°14′02″E / 8.2057°N 80.2339°E |
வகை | தொல்பொருள் / கிராமிய |
வலைத்தளம் | http://www.archaeology.gov.lk |
கிராமிய சமூக மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்கள் கிராமவாசிகளின் வாழ்க்கைமுறையை எடுத்தியம்புகின்றன. இங்கு பொதுவாக விவசாய உபகரணங்கள், சமயலறை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், இசைக்கருவிகள் போன்றவையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[3]
திறக்கும் நேரம்
தொகுதினமும் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை இந்நூதனசாலை திறந்திருக்கும். ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பொதுசன விடுமுறைகளிலும் மூடப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கிராமிய நூதனசாலை". பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Anuradhapura Folk Museum". Department of National Museums. Archived from the original on 9 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
- ↑ "Anuradhapura Folk Museum : Portraying the lifestyle of a peasantry". Sunday Observer (Sri Lanka). Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)