அனுராதா கொய்ராலா

அனுராதா கொய்ராலா(Anuradha Koirala) பாலியல் தொழிலுக்கு அடிமையாக்கப்பட்ட ஏறத்தாழ 12 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்ட சமூகப் போராளி.[1] கொய்ராலாவின் சமூகப் பணிகளுக்காக 2006, ஆகஸ்ட் 26-ல் உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருது பெற்றிருக்கிறார்.[2] சி.என்.என். இணையத்தளம் மூலமாக 2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக அனுராதா தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3][4][5]

அனுராதா கொய்ராலா
Anuradha.jpg
பிறப்பு14 ஏப்ரல் 1949
Rumjatar, Okhaldhunga, நேபாளம்
குடியுரிமைநேபாளி
பணிசமூகசேவையாளர்
சமயம்இந்து
பெற்றோர்Colonel Pratap Singh Gurung and Laxmi Gurung
வாழ்க்கைத்
துணை
தினேஷ் பிரசாத் கொய்ராலா (பிரிந்துவிட்டனர்)

மைதி நேபாள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் அனுராதா, இளம்வயதிலேயே ஒரு முறைகேடான உறவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் . அப்போது ஒரு ஆரம்பப்பள்ளியில் ஆங்கிலம் போதித்துக் கொண்டிருந்தார். அந்த உறவிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து மூன்று முறை தோற்றார். யாரிடம் போய் இதையெல்லாம் புகார் தெரிவிப்பது, யார் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று திக்குத் தெரியாமல் தவித்தார். எப்படியோ அந்த உறவிடமிருந்து விடுதலை பெற்றபிறகு, அதுவரை தான் ஆசிரியத் தொழிலில் சம்பாதித்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு சிறிய கடை தொடங்கினார். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களையே பணிக்கும் அமர்த்தினார். 1990களின் தொடக்கத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் கொய்ராலாவைத் தொடர்புகொள்ள 'மைத்தி' உருவானது.[6]

சிஎன்என் ஹீரோ விருதுடன் அனுராதா கொய்ராலா

கடந்த 1993-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 12,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்க உறுதுணை புரிந்துள்ளார். மீட்கப்பட்டவர்கள் புது வாழ்க்கையை அமைத்து தந்ததோடு, நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் பெற வழிவகை செய்து வருபவர். அனுராதா கொய்ராலாவும் அவரது மைதி நேபால் அமைப்பும், மிகப் பெரிய பாலியல் சந்தையாகக் கருதப்படும் இந்திய – நேபாள எல்லையில் விற்கப்படும் இளம்பெண்களை தடுத்து காப்பாற்றி வருகின்றனர். 1993-லிருந்து இவர்களால் இதுவரை 12000 பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.உலக ஹீரோவாக தேர்வு பெற்ற அனுராதாவுக்கு தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதற்காக 25,000 டாலர்கள் தொகையுடன், 1,00,000 டாலர்கள் பரிசு வழங்கப்படுகிறது.[5][7]

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_கொய்ராலா&oldid=2210852" இருந்து மீள்விக்கப்பட்டது