அனுராதா திவாரி
அனுராதா திவாரி (Anuraadha Tewari; பிறப்பு 11 ஆகத்து 1971) மும்பையின் ஊடகத் துறையில் பணிபுரியும் ஒரு பிரபல இந்திய எழுத்தாளரும், இயக்குநரும், படைப்பாற்றல் கலைஞரும் ஆவார். தில்லி, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் இருந்து மக்கள் செய்தித் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் திரைப்பட தயாரிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். கடந்த 25 ஆண்டுகளாக ஒரு படைப்பாற்றல் கலைஞராகவும், நிறுவனங்களின் தலைவராகவும் அனைத்து ஊடகத் தளங்களிலும் விரிவாக பணியாற்றியுள்ளார். 2017 ஆம் ஆண்டில், அனுராதா இந்தியாவின் முதல் எழுத்தாளர் அறைகளை 'கோசென் ரூஃபு' என்ற அகாதமியின் கீழ் அமைத்தார். இது பல்வேறு ஓடிடி தளங்கள், திரைப்பட அரங்கங்கள் மற்றும் நாடு முழுவதும் தொலைக்காட்சி நிறுவனக்களுடன் விரிவாக வேலை செய்கிறது. இவர் உலகெங்கிலும் திரைக்கதைக்கென ஒரு சான்றிதழ் படிப்பை நடத்துகிறார்.
பேஷன் (2008), ஜெயில் (2010),[1][2] , ஹீரோயின் (2012) போன்ற விருது பெற்ற படங்களின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியதற்காக மிகவும் புகழ்பெற்றது. அனுராதாவின் திரைக்கதைகள் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா , கங்கனா ரனாத் போன்ற நடிகைகளுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தன்ந்தன. அமேசான் பிரைம் வீடியோவில் உள்ள லாகோன் மெய்ன் ஏக் (பருவம் 2) என்ற இணையத் தொடர்களில் முதல் திரைக்கதை எழுத்தாளர்கள் சங்க விருதுகளில் இவருக்கான பரிந்துரையை வென்றது. அதில் இவர் நடுவர் குழு உறுப்பினராகவும் இருந்தார். அனைத்து வகைகளிலும் சிறப்பாகப் பணிபுரியும், அனுராதா #உணர்வுபூர்வமான படைப்பாற்றல் (#ConsciousCreativity) மற்றும் இளைய, புதிய படைப்பாற்றல் மனதிற்கு ஒரு குணப்படுத்தும் கருவியாக கதைகளில் கவனம் செலுத்த பயிற்சி அளிக்க விரும்புவதால் அறியப்படுகிறார்.
சுயசரிதை
தொகுகல்வி
தொகுவெல்காம் பெண்கள் பள்ளியில் இந்திய பள்ளி சான்றிதழ் படித்த இவர், புது தில்லி லேடி சிறீ ராம் கல்லூரிபொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் இருந்து மக்கள் செய்தித் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் இருந்து திரைப்பட இயக்கத்தில் தங்கப் பதக்கத்துடன் மக்கள் செய்தித் தொடர்பியலை முடித்த அனுராதா இயக்குநர் மகேசு பட்டுக்கு தலைமை உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவருடன் 3 படங்களில் பணியாற்றினார். அனுபம் கெரின் ஊடக அடிப்படையிலான நிறுவனத்திற்கான சுயாதீன எழுத்தாளர், இயக்குநர் மற்றும் தொலைக்காட்சிக்கான சில நிகழ்ச்சிகளையும் நிகழ்வுகளையும் இயக்கியதற்காக அந்த நேரத்தில் இந்தியாவின் இளைய இயக்குனராக முக்கிய ஊடகங்களால் அங்கீகரிக்கப்பட்டார்.
அதன்பிறகு, சேனல் வி-ன் மேற்பார்வை தயாரிப்பாளராகவும், வால்சந்த் குழுமத்தின் திரைப்படங்களின் அடிப்படையிலான கிரெஸ்ட் கம்யூனிகேஷன்ஸ்" என்ற வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இயக்குநர் என பணியாற்றினார். 2002ஆம் ஆண்டில் படைப்பாற்றலுக்குத் திரும்பிய இவர், பிரகாஷ் ஜாவின் 'ராகுல்', சுபாஷ் கை எழுதிய 'யாதீன்' மற்றும் பதம் குமாரின் 'சுபாரி' ஆகியவற்றில் கதை - திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு தொடங்கி, சோனி தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்பட்ட யாஷ்ராஜ் பிலிம்சின் 26 பாகங்கள் கொண்ட தொடரான 'செவன்' உடன் முடிவடைந்த 12 வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எழுதினார். அதைத் தொடர்ந்து விருது பெற்ற 'ஃபேஷன்' (2008) 'ஜெயில்', 'ஹீரோயின்' (2012) ஆகியவற்றின் கதை மற்றும் திரைக்கதையையும் எழுதினார். அனைத்து 3 படங்களையும் மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். 2017ஆம் ஆண்டில், இவர் பல்வேறு திட்டங்களில் எழுத்தாளர் அறையாக பணியாற்றினார். உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களுடன் ஒத்துழைக்கும் 'கோசென் ரூஃபு' (KOSEN-RUFU) என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இவர் திரைப்பட விழாக்களின் கண்காணிப்பாளராகவும், பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் திரைக்கதையில் தனது சொந்த சான்றிதழ் பாடத்திட்டத்தையும் கொண்டுள்ளார்.