பிரியங்கா சோப்ரா

இந்திய நடிகை

பிரியங்கா சோப்ரா இந்தி: प्रियंका चोपड़ा; ஜூலை 18, 1982 -ல் பிறந்தார்.[1] இவர் ஓர் இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.

பிரியங்கா சோப்ரா

பிறப்பு சூலை 18, 1982 (1982-07-18) (அகவை 41)
இந்தியா ஜாம்ஷெட்பூர்,ஜார்க்கண்ட் இந்தியா
நடிப்புக் காலம் 2001 – தற்போது வரை

சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அதே படத்திற்காக அவர் பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டில் அப்பாஸ்-முஸ்தானின் ஐத்ராஸ் (2004) இல் மிகவும் பாராட்டும்படியான அவரது நடிப்பிற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெறும் இரண்டாவது பெண்மணியானார். சோப்ரா பின்னர் முஜ்சே ஷாதி கரோகி (2004), க்ரிஷ் (2006) போன்ற வணிக வெற்றிப் படங்களைக் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன் (2006) அவருடைய மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிப் படமாகும். 2008 ஆம் ஆண்டில், சோப்ரா பேஷன் திரைப்படத்தில் சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். அதுவே அவரை ஒரு பிரபலமான நடிகையாக நிலைநாட்டியது.[2]

ஆரம்ப வாழ்க்கை

தொகு

சோப்ரா அவர்கள் மருத்துவத் தம்பதிகளான அசோக் சோப்ரா மற்றும் மது அகௌரி தம்பதிகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் பிறந்தார்.[3] சோப்ரா பாரெய்லி, உத்தரப் பிரதேசம்; நியூட்டன், மாஸ்சசூசெட்ஸ்; மற்றும் சேடார் ரேபிட்ஸ், ஐயோவா ஆகியவற்றில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார்.[4] அவரது தந்தை ராணுவத்தில் இருந்ததால் அவரின் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது. அவரது தந்தை பாரெய்லியில் வசிக்கும் பஞ்சாபி காத்ரி சமூகத்திலிருந்து வந்தவர். அவரது தாய் ஜாம்ஷ்ட்பூரில் வசிக்கும் மலையாளக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருக்கு அவரைவிட ஏழு வயது சிறியவரான சித்தார்த் என்ற ஒரு சகோதரர் இருக்கின்றார்.[5]

சோப்ரா இளம் சிறுமியாக இருந்தபோது பாரெய்லியில் உள்ள புனித மரியா கோரெட்டி பள்ளியிலும் லக்னோவில் உள்ள லா மார்டினியரி பெண்கள் பள்ளியிலும் பயின்றார். அசோக் இந்திய இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்ததால் இந்த அடிக்கடியான இடம்பெயர்வு நிகழ்ந்தது. இந்த இடம்பெயர்வு அவரை அமெரிக்க ஒன்றியத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் நியூட்டன், மாஸ்சசூசெட்ஸில் உள்ள நியூட்டனின் நியூட்டன் சவுத் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் சேடார் ரேபிட்ஸ், ஐயோவாவில் உள்ள ஜான் எஃப். கென்னடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பிறகு இந்தியா வந்த அவர் பாரெய்லியில் உள்ள ராணுவப் பள்ளியில் அவரது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பையிலுள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் கல்லூரி படிப்பைத் தொடங்கினார். ஆனால் உலக அழகி பட்டம் வென்ற பிறகு வெளியேறிவிட்டார்.

உலக அழகி

தொகு

சோப்ரா இந்திய உலகின் அழகியாக முடிசூட்டப்பட்டார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் உலக அழகியானார்.[6] அதே ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா மற்றும் தியா மிர்ஸா ஆகிய இருவரும், பிரபஞ்ச அழகியாகவும் ஆசிய பசுபிக் அழகியாகவும் முறையே முடிசூட்டப்பட்டனர். ஒரே நாட்டிற்கு அரிதான மூன்று வெற்றிகள்.

சோப்ரா உலக அழகி மகுடத்தை வென்றதால், அப்பட்டத்தை வெல்லும் ஐந்தாவது இந்தியப் பெண்ணாகவும் ஏழாண்டுகள் இடைவெளியில் அப்பட்டத்தை வெல்லும் நான்காவது பெண்ணாகவும் ஆனார்.

நடிப்பு வாழ்க்கை

தொகு

உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சோப்ரா ஒரு நடிகையானார். அவர் 2002 ஆம் ஆண்டில் தமிழன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய் உடன் அறிமுக நாயகியானார். அதில் அவர் பிண்ணனியும் பாடியுள்ளார். அதன் பின்னர் பாலிவுட் திரையுலக்குச் சென்றுவிட்டார். 2003 ஆம் ஆண்டில், அவரது முதல் பாலிவுட் திரைப்படமான தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை வெளியிடப்பட்டு வெற்றியும் பெற்றதால் அவருக்கு நல்ல மதிப்புரைகள் கிடைத்தன.[7] அத்திரைப்படத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீடு கொடுக்கப்பட்ட போதிலும், அந்த ஆண்டின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் அத்திரைப்படமும் ஒன்றானது.[8]

அவரின் அடுத்த படம், அக்‌ஷய் குமாருடன் நடித்த ஆண்டாஸ் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.[9] அப்படம் மூலம் அவர் பிலிம் பேர் சிறந்த பெண் அறிமுகம் விருதையும் பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரையையும் பெற்றார். அவரின் அடுத்த சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோசமாக ஓடிய படங்களாக இருந்தன.[10]

2004 ஆம் ஆண்டில், அவருடைய முஜ்சே ஷாதி கரோகி திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் அந்தப்படம் அந்த ஆண்டில் அதிக வசூலான திரைப்படங்களில் மூன்றாவதாக வந்தது.[11] அவரின் அடுத்த வெளியீடு ஐத்ராஸ், இது டெமி மூர் நடித்த டிஸ்க்ளோசர் என்ற படத்தின் இந்தி மறுதயாரிப்பாகும். அது அவரின் முதல் "எதிர்மறை" பாத்திரம், அதில் அவர் வில்லியாக நடித்தார். அவரின் மிகவும் பாராட்டும்படியான நடிப்பு [12] அவருக்கு பிலிம்பேரின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றுத்தந்தது. அவர் இரண்டாவது முறையாக பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரையையும் பெற்றார். அதே ஆண்டில், டெம்ப்டேஷன் 2004 என்ற உலகச் சுற்றுலாவில் ஷாருக் கான், சைப் அலி கான், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் கலந்துகொண்டார்.

2005 ஆம் ஆண்டில் அவரது பல படங்கள் வெளியாகின. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடும்படி இல்லை.[13]

2006 ஆம் ஆண்டில், சோப்ரா அந்த ஆண்டின் பெரும் வெற்றிபெற்ற இரண்டு திரைப்படங்களில் நடித்தார் - க்ரிஷ் மற்றும் டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்.[14]

நிகில் அத்வானியின் குழு படைப்பான, சலாம் ஈ இஸ்க்: எ ட்ரைப்யூட் டூ லவ் திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் சோப்ராவின் முதல் வெளியீடாகும். அந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற தவறிவிட்டது.[15] சோப்ராவின் அடுத்த வெளியீடான, பிக் பிரதர் திரைப்படமும் வெற்றி பெறவில்லை.

2008 ஆம் ஆண்டில் சோப்ரா நடித்த ஆறு படங்கள் வெளிவந்தன. அவரின் முதல் நான்கு வெளியீடுகளான, லவ் ஸ்டோரி 2050, காட் துசி கிரேட் ஹோ, சாம்கு மற்றும் த்ரோனா ஆகியவை வெற்றியடையத் தவறிவிட்டன.[16] இருப்பினும் பின்னர் வந்த அவரின் இரண்டு படங்களான பேஷன் மற்றும் தோஸ்தனா ஆகியவை முறையே 26,68,00,000 மற்றும் 44,42,00,000 என்று பாக்ஸ் ஆபிசில் வசூலித்தன.[16] மேலும் பேஷனில் அவரின் நடிப்பு பிற விருதுகளுடன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருதைப் பெற்றுத் தந்தது.

2009 ஆம் ஆண்டில் நடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்கள், விஷால் பரத்வாஜ் இன் காமினி, ஆசுதோஷ் கோவாரிகரின் வாட்ஸ் யுவர் ராசி? மற்றும் ஜூகல் ஹன்ஸ்ராஜ் உடைய பியார் இம்பாசிபிள் ஆகியவை.[17]

விருதுகள் மற்றும் மரியாதைகள்

தொகு

விமர்சனங்கள்

தொகு

2008 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பாண்ட்ஸின் தயாரிப்பின் வணிகத் தூதராக சோப்பராவை நியமித்தது.[18] பின்னர் அவர் சருமத்தை வெண்மையாக்கும் வணிகத் தயாரிப்புகளுக்கான சிறிய தொலைக்காட்சி விளம்பரத் தொடர்களில் சைப் அலி கான் மற்றும் நேஹா துபியா ஆகியோருடன் இணைந்து நடித்தார்; இந்த விளம்பரங்கள் இனவெறியைத் தூண்டுவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டன.[19]

திரைப்பட விவரங்கள்

தொகு
வருடம் (திரைப்படம்) பாத்திரம் மற்ற குறிப்புகள்
(2002). தமிழன் பிரியா தமிழ்த் திரைப்படம்
2003 தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை ஷாஹீன் சகாரியா
ஆண்டாஸ் ஜியா வெற்றியாளர், ' பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக விருது
பரிந்துரைக்கப்பட்டார், பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
2004 ப்ளான் ராணி
கிஸ்மத் சப்னா
அசம்பவ் அலிஷா
முஜ்சே ஷாதி கரோகி ராணி சிங்
ஐத்ராஸ் திருமதி. சோனியா ராய் வெற்றியாளர், சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரைக்கப்பட்டார், பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
2005 ப்ளாக்மைல் திருமதி. ரத்தோத்
கரம் ஷாலினி
வாக்த்: தி ரேஸ் அகெய்ன்ஸ்ட் டைம் பூஜா
யாகீன் சிமர்
பர்சாத் காஜல்
ப்ளஃப்மாஸ்டர் சிம்மி அஹூஜா
2006 டாக்சி நம்பர் 9211 சிறப்புத் தோற்றம்
36 சைனா டவுன் ஷௌன் மஹராஜ் சிறப்புத் தோற்றம்
அலாக் சப்சே அலாக் எனும் பாடலில் சிறப்புத் தோற்றம்
க்ரிஷ் பிரியா
ஆப் கி காதிர் அனு
டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன் ரோமா
2007 சலாம் ஈ இஸ்க்: எ ட்ரைப்யூட் டூ லவ் காமினி
பிக் பிரதர் ஆர்த்தி ஷர்மா
ஓம் சாந்தி ஓம் இவராகவே தீவாங்கி தீவாங்கி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம்
2008. மை நேம் இஸ் அந்தோனி கோன்சல்வெஸ் இவராகவே சிறப்புத் தோற்றம்
லவ் ஸ்டோரி 2050 சனா/சேய்ஷா இரட்டை வேடம்
காட் துசி கிரேட் ஹோ அலியா கபூர்
சாம்கு ஷூபி
த்ரோனா சோனியா
பேஷன் மேக்னா மதூர் வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த நடிகை விருது
தோஸ்தனா நேஹா மேல்வானி
2009. பில்லு இவராகவே யூ கெட் மி ராக்கின் & ரீலிங் பாடலில் சிறப்புத் தோற்றம்
காமினி ஸ்வீட்டி ஆகஸ்ட் 14, 2009 அன்று வெளியானது
வாட்ஸ் யுவர் ராசி? செப்டம்பர் 25, 2009 அன்று வெளியானது
பியார் இம்பாசிபிள் அலிஷா படப்பிடிப்பில்
2010 Alibaba Aur 41 Chor மர்ஜினா குரல்

குறிப்புகள்

தொகு
 1. liveindia.com சுயவிவரம். ஜனவரி 14, 2006 ஆம் ஆண்டில் பெறப்பட்டது
 2. "Powerlist: Top Bollywood Actresses". Priyanka ranks #2 on Rediff's Top Bollywood Actresses. பார்க்கப்பட்ட நாள் 25 August 2006. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 3. Indianuncle.com சுயவிவரம். ஜனவரி 14, 2006 ஆம் ஆண்டில் பெறப்பட்டது
 4. priyankachopra.org சுயவிவரம். நவம்பர் 19, 2008 ஆம் ஆண்டில் பெறப்பட்டது
 5. "Priyanka's precious gift for her brother". Siddharth: Priyanka's younger brother. பார்க்கப்பட்ட நாள் 17 March 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 6. "Priyanka Chopra is Miss World 2000". rediff.com. 2000-12-01 இம் மூலத்தில் இருந்து 2006-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060709023312/http://www.indianceleb.com/pg/img4007.htm. பார்த்த நாள்: 2006-08-02. 
 7. "Movie Review: The Hero". Priyanka wins good review for her debut performance in The Hero. பார்க்கப்பட்ட நாள் 11 April 2003. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 8. "Box Office 2003". The Hero becomes one of the highest grossing films of 2003. Archived from the original on 20 மே 2004. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 9. "Box Office 2003". Andaaz becomes a hit at the bos office. Archived from the original on 20 மே 2004. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 10. "Priyanka Chopra Filmography". Priyanka's films fail to do well at the box office. Archived from the original on 16 பிப்ரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |dateformat= ignored (help)
 11. "Box Office 2004". MSK becomes the third highest grossing film of 2004. Archived from the original on 15 டிசம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |dateformat= ignored (help)
 12. "Movie Review: Aitraaz". Priyanka wins critical acclaim for her negative role. பார்க்கப்பட்ட நாள் 11 November 2004. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
 13. "Priyanka Chopra Filmography". Priyanka's releases in 2005 fail to do well at the box office. Archived from the original on 16 பிப்ரவரி 2007. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |dateformat= ignored (help)
 14. "Box Office 2006". Krrish & Don become one of the most successful films of 2006. Archived from the original on 4 ஜூலை 2006. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |dateformat= ignored (help)
 15. "Box Office 2007". Salaam-e-Ishq flops at the box office. Archived from the original on 15 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 7 July 2003. {{cite web}}: Check date values in: |archivedate= (help); Unknown parameter |dateformat= ignored (help)
 16. 16.0 16.1 "Box Office 2008". BoxOffice India.com. Archived from the original on 2012-05-25. பார்க்கப்பட்ட நாள் August 7, 2009.
 17. "Pyaar Impossible". Yash Raj Films. பார்க்கப்பட்ட நாள் May 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |dateformat= ignored (help)
 18. பாண்ட்ஸின் புதுமுகம் பிரியங்கா சோப்ரா பரணிடப்பட்டது 2010-05-26 at the வந்தவழி இயந்திரம், தாயிண்டியன் நியூஸ், 6 மே 2008
 19. இந்தியாவில் தோலை வெண்மையாக்கும் போக்கு பற்றிய விமர்சனம், டெய்லி டெலிகிராப், 10 ஜூலை 2008

புற இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_சோப்ரா&oldid=3944575" இலிருந்து மீள்விக்கப்பட்டது