உலக அழகி (Miss World) போட்டிகள் பன்னாட்டளவில் இன்றும் நடத்தப்பெறும் ஓர் மிகப் பழைமைவாய்ந்த அழகுப் போட்டி ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் எரிக் மோர்லேயால் 1951ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. [1][2]2000ஆம் ஆண்டில் எரிக் மோர்லேயின் மறைவிற்குப் பின்னர் அவரது மனைவி ஜூலியா மோர்லே இந்த அழகுப் போட்டிக்கு இணைத்தலைவராக இருந்து வருகிறார்.[3]

உலக அழகி
உருவாக்கம்1951
வகைஅழகுப் போட்டி
தலைமையகம்லண்டன்
தலைமையகம்
  • ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
ஆட்சி மொழி
ஆங்கிலம்
தலைவர்
ஜூலியா மோர்லே
முக்கிய நபர்கள்
எரிக் மோர்லே
வலைத்தளம்அலுவல்முறை இணையத்தளம்

இதன் போட்டி நிகழ்வுகளான பிரபஞ்ச அழகி மற்றும் புவி அழகி போட்டிகளுடன் இது உலகளவில் மிகவும் பரவலாக பேசப்படும் அழகுப் போட்டிகளில் ஒன்றாகும். [4][5]

உலக அழகிப் பட்டம் வென்றவர் உலக அழகி நிறுவனத்திற்காகவும் அதன் பல்வேறு காரணங்களுக்காகவும் பரப்புரை ஆற்றவேண்டி அவ்வாண்டு முழுமையும் உலகெங்கும் பயணிக்க வேண்டும்.[6] உலக அழகி தன்னாட்சிக் காலத்தில் லண்டனில் வசிப்பது மரபு. தற்போதைய உலக அழகியாக வெனிசுவேலாவின் இவியான் சார்கோசு உள்ளார்.

வரலாறு தொகு

இதனை உலக அழகிப் போட்டி என ஊடகங்கள் அழைத்தப்போதும் விழாக்கால நீச்சலாடை அணிவகுப்பாகவே முதலில் துவங்கியது. அந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்ட நீச்சலாடைகளை அறிமுகப்படுத்தும் வகையிலேயே இது அமைந்திருந்தது. பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டுருந்ததை கண்டு மோர்லி இதனை ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்தார். [7][8]

மிகக் குறுகிய நீச்சலாடைகளுக்கு எதிர்ப்புக்கள் கிளம்பவே கண்ணியமிக்க நீச்சலாடைகளுடன் தொடர்ந்தது.1959இல் பிரித்தானிய ஒலிபரப்புக் கழகம் இதனை ஒளிபரப்பத் தொடங்கியது. தொலைக்காட்சி பரப்புரைக்குப் பின்னரே இந்த அணிவகுப்பின் புகழ் பெருகத் தொடங்கியது. 1960களிலும் 1970களிலும் பிரித்தானியத் தொலைக்காட்சிகளில் உலக அழகிப் போட்டி நிகழ்ச்சிகள் 30 மில்லிநனுக்கும் கூடுதலான பார்வையாளர்களைக் கொண்டு மிக அதிகமாக காணப்பட்டவையாக மதிப்பிடப்பட்டன.

1980களில் இந்த அணிவகுப்பு "குறிக்கோளுடன் கூடிய அழகு" என்ற விளம்பர வாக்குடன் மீளாக்கப் பட்டது; புதியதாக அறிவுத்திறன் மற்றும் தன்னாண்மை குறித்த தேர்வுகள் சேர்க்கப்பட்டன.[9] இருப்பினும், பிரித்தானியாவில் இந்தப் போட்டி பழமையானதாகவும் சரியான அரசியல்நிலை இல்லாததாகவும் கருதப்பட்டது. பல ஆண்டுகளாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாதிருந்தது 1998ஆம் ஆண்டு மாறியது. அந்த ஆண்டின் உலக அழகிப் போட்டியை ஐந்தாம் அலைவரிசை (Channel 5) ஒளிபரப்பியது.[10][11]

பெற்ற வெற்றிகளின் வரிசையில் தொகு

 
நாடுவாரியாக உலக அழகி பட்டம் வென்றவர்கள்.
நாடு/ஆட்சிப்பகுதி பட்டங்கள் வென்ற ஆண்டுகள்
  வெனிசுவேலா
6
1955, 1981, 1984, 1991, 1995, 2011
  இந்தியா 1966, 1994, 1997, 1999, 2000, 2017
  ஐக்கிய இராச்சியம் 5 1961, 1964, 1965, 1974 (resigned), 1983
  ஐக்கிய அமெரிக்கா
3
1973, 1990, 2010
  சுவீடன் 1951, 1952, 1977
  ஜமேக்கா 1963, 1976, 1993, 2019
  சுவீடன் 1951, 1952, 1977
  ஐசுலாந்து 1985, 1988, 2005
  உருசியா
2
1992, 2008
  பெரு 1967, 2004
  ஆஸ்திரியா 1969, 1987
  செருமனி 1956, 1980 (resigned)
  அர்கெந்தீனா 1960, 1978
  தென்னாப்பிரிக்கா 1958, 1974, (நவம்பர் 1974இல் எடுத்துக் கொண்டார்)2014

[12]

  ஆத்திரேலியா 1968, 1972
  நெதர்லாந்து 1959, 1962
  கிப்ரல்டார்
1
2009
  சீனா 2007
  செக் குடியரசு 2006
  அயர்லாந்து 2003
  துருக்கி 2002
  நைஜீரியா 2001
  இசுரேல் 1998
  கிரேக்க நாடு 1996
  போலந்து 1989
  Trinidad & Tobago 1986
  டொமினிக்கன் குடியரசு 1982
  குவாம் 1980 (28 நவம்பர் 1980இல் எடுத்துக் கொண்டார்)
  பெர்முடா 1979
  புவேர்ட்டோ ரிக்கோ 1975
  பிரேசில் 1971
  கிரெனடா 1970
  பின்லாந்து 1957
  எகிப்து 1954
  பிரான்சு 1953

வாகை சூடியவர் அரங்கு தொகு

இந்தியாவில் இது வரை ஐந்து பெண்கள் உலக அழகிப் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களில் ஐஸ்வர்யா ராய் பிரபலமானவர். 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Tianjin Miss World China Pageant comes to a close". China Daily. 28 August 2009. http://www.chinadaily.com.cn/m/tianjin/e/2009-08/28/content_8629097.htm. பார்த்த நாள்: 24 May 2011. 
  2. "Miss Universe on August 23". Timesofmalta.com. http://www.timesofmalta.com/articles/view/20090814/world-news/miss-universe-on-august-23. பார்த்த நாள்: 24 May 2011. 
  3. "Pageant News Bureau – Miss World: A long, glittering history". Pageant.com. http://www.pageant.com/archive/world.html. பார்த்த நாள்: 24 May 2011. 
  4. 22 January 2009 (22 January 2009). "Brazil’s Miss World finalist has her hands and feet amputated". English.pravda.ru. http://english.pravda.ru/society/stories/22-01-2009/106992-mariana_miss_world-0. பார்த்த நாள்: 24 May 2011. 
  5. "Tracing the regal existence of ‘Miss Universe’". Spicezee.com. 7 October 2008 இம் மூலத்தில் இருந்து 23 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090423055414/http://www.spicezee.com/missuniverse08/article5354.htm. பார்த்த நாள்: 24 May 2011. 
  6. Philanthropy Magazine: Beauty With A Purpose
  7. "Frontline World: A Pageant is Born". Pbs.org. http://www.pbs.org/frontlineworld/stories/nigeria/1950s.html. பார்த்த நாள்: 24 May 2011. 
  8. "Bet on Miss World Pageant". Covers.com இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716192717/http://www.covers.com/articles/articles.aspx?theArt=166289&article&t=0. பார்த்த நாள்: 24 May 2011. 
  9. "Tiza.com. Miss World". Tiza.com. http://www.tiza.com/pageant-archives/Miss_World/. பார்த்த நாள்: 24 May 2011. 
  10. "Should the Miss World pageant have gone ahead?". BBC News. 9 December 2002. http://news.bbc.co.uk/2/hi/talking_point/2553049.stm. பார்த்த நாள்: 24 May 2011. 
  11. "Mayor's frosty reception for Miss World". BBC News. 26 November 2002. http://news.bbc.co.uk/2/low/uk_news/england/2515189.stm. பார்த்த நாள்: 24 May 2011. 
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160310130336/http://www.maalaimalar.com/2014/12/15103035/Miss-South-Africa-Rolene-Strau.html. 


வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Miss World
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_அழகி&oldid=3545235" இருந்து மீள்விக்கப்பட்டது