அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை
அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை (The International Covenant on Economic, Social and Cultural Rights (ICESCR)) என்பது ஒரு பன்னாட்டு உடன்படிக்கை ஆகும். இது ஐ.நா பொது அவையால் டிசம்பர் 16, 1966 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. சனவரி 3, 1976 தொடக்கம் அமுலில் இருக்கிறது. இது பங்குத் தாரர்களை தனி மனிதர்களுக்கான விரிவான பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளை உறுதிசெய்யுமாறு இயங்க நிர்பந்திக்கிறது. தொழிலாளர் உரிமைகள், நலத்துக்கான உரிமை, கல்விக்கான உரிமை, அடிப்படை வாழ்வாதார உரிமை ஆகிய உரிமைகள் இதில் அடங்கும்.[1][2][3]
மேற்கோள்கள் தொகு
- ↑ "International Covenant on Economic, Social and Cultural Rights". www.refworld.org. http://www.refworld.org/docid/3ae6b36c0.html.
- ↑ "EISIL International Covenant on Economic, Social and Cultural Rights". www.eisil.org. http://www.eisil.org/index.php?sid=4ails&id=239&t=link_details&cat=187.
- ↑ "UN Treaty Collection: International Covenant on Economic, Social and Cultural Rights". UN. 3 January 1976. https://treaties.un.org/Pages/ViewDetails.aspx?src=IND&mtdsg_no=IV-3&chapter=4&clang=_en.