அனைத்து கட்சி மலையக தலைவர்கள் மாநாடு

மேகாலயாவின் அரசியல் கட்சி

அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாடு (All Party Hill Leaders Conference) என்பது இந்திய மாநிலமான மேகாலயாவின் ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தலைவராக வில்லியம்சன் ஏ. சங்மா இருந்தார்.[1][2][3]

1970 முதல் 1982 வரை மேகாலயா சட்டமன்றத்தில் கட்சி பெரும் வெற்றிகளை இக்கட்சிப் பெற்றது. ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த இக்கட்சியினர், மேகாலயா மாநிலத்திற்கு நான்கு முதல்வர்களை வழங்கியுள்ளது. அனைத்துக் கட்சி மலைத் தலைவர்கள் மாநாட்டுக் கட்சி, தேர்தலில் போட்டியிட்டு, மலை மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அசாம் சட்டமன்றத்தில் 15 இடங்களில் 11 இடங்களைப் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tag Archives: All Party Hill Leaders Conference". Archived from the original on 2017-05-29. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  2. "All Party Hill Leaders' Conference, Shillong V. Captain M.a. Sangma & Ors". Archived from the original on 2022-11-21. பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
  3. "History of India". indiansaga.com.