அனைத்து கணம்

அனைத்து கணம் (Universal Set) என்பது ஒரு குறிப்பிட்ட விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கிய தொகுப்புகளின் கணம் ஆகும். அனைத்து கணம் U என்ற குறியீட்டால் குறிப்பிடப்படும்.

எடுத்துக்காட்டு

தொகு

தற்சமயம் நாம் எடுத்துக் கொண்ட விவாதத்தில் இயல் எண்களின் கணம், நிறைவெண்களின் கணம், முழு எண்களின் கணம், விகிதமுறு எண்களின் கணம், விகிதமுறா எண்களின் கணம், மெய் எண்களின் கணம் முதலியவற்றை கொண்டிருந்தால், இவற்றில் உள்ள அனைத்து கணங்களையும் உள்ளடங்கிய கலப்பெண்கள் அல்லது சிக்கலெண்களின் கணமானது, இவ்விடத்தில் அனைத்து கணம் ஆகும்.

வென்படம்

தொகு
 
வென்படம் மூலமாக அனைத்து கணத்திற்கும் நிரப்பு கணத்துக்குமுள்ள தொடர்பு.

கணிதத்தில், கணங்களுக்கிடையிலான உறவுகளைக் குறிக்கவும் மற்றும் கணச்செயல்களை பார்த்து புரிந்து கொள்ளவும் நாம் பயன்படுத்தும் வரைபட விளக்கங்கள் படங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர்.ஏ.சந்திரசேகரன். காப்பகப்படுத்தப்பட்ட நகல் (PDF). தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். Archived from the original (PDF) on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்து_கணம்&oldid=4149171" இலிருந்து மீள்விக்கப்பட்டது