அன்சைலைட்டு
அன்சைலைட்டு (Ancylite) என்பது Sr(Ce,La)(CO3)2(OH)·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சீரியம், இலந்தனம் மற்றும் சிறிய அளவில் மற்ற அருமண் தனிமங்கள் இதில் கலந்துள்ளன. நீரிய இசுட்ரோன்சியம் கர்பனேட்டு கனிமங்கள் கலந்துள்ள ஒரு குழுவாக இக்கனிமம் அறியப்படுகிறது.[1] பன்னாட்டு கனிமவியல் சங்கம் அன்சைலைட்டு கனிமத்தை Anc[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
அன்சைலைட்டு Ancylite | |
---|---|
பக்கவாட்டில் அன்சிலைட்டு படிகங்களுடன் நெனத்கேவிகைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Sr(Ce,La)(CO3)2(OH)·H2O |
இனங்காணல் | |
நிறம் | வெளிர் மஞ்சள், ஆரஞ்சு-மஞ்சள், மஞ்சள்-பழுப்பு, சாம்பல் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரப் படிகம் |
பிளப்பு | இல்லை |
முறிவு | பிளவு கொண்டது |
விகுவுத் தன்மை | உடையக்கூடியது |
மோவின் அளவுகோல் வலிமை | 4–4.5 |
மிளிர்வு | மங்கலானதுl |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
அடர்த்தி | 3.95 g/cm3 |
மேற்கு கிரீன்லாந்தில் உள்ள நர்சர்சுக் அனற் பாறைகளில் 1899 ஆம் ஆண்டில் அன்சைலைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. பண்டைய கிரேக்க மொழியில் வளைவான அல்லது சிதைந்த படிக வடிவத்தைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.[1][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 http://webmineral.com/data/Ancylite-(Ce).shtml Webmineral data Ancylite-Ce.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ http://www.mindat.org/min-216.html Mindat.