அன்னக்கொடி விழாக்கூத்து
அன்னக்கொடி விழாக்கூத்து என்பது, சிவனடியாரான சிறுத்தொண்டரின் கதையைப் பக்தி உணர்வுடன் நிகழ்த்தும் கூத்து வடிவிலான கலை அன்னக்கொடி விழாக் கூத்தாகும்.[1] அன்னம் என்றால் உணவு என்று பொருள் . எனவே, இவ்விழாவினை உணவு படையல் விழா என்றும் கொள்ளலாம் . சிறுத்தொண்டர் முக்தியடைந்த நாளான சித்திரைத் திங்கள் பரணி நட்சத்திர நாள், இதற்குரிய நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா பெரும்பாலும் ஆற்றங்கரை, ஏரி, குளம், பொது நீர்நிலை போன்ற இடங்களிலிருந்தே தொடங்கும். இவ்விழாவினில் பங்கேற்பதன் மூலம் மகப்பேறு கிட்டும் , கெட்ட ஆவியோ, நோயோ அண்டாது என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களின் மனதில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-06-25.