அன்னபூர்ணேசுவரி கோயில், செருகுன்னு

அன்னபூர்ணேசுவரி கோயில் இந்தியாவில் கேரளாவின் கண்ணூரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . இக்கோயிலின் மூலவர் உணவின் தெய்வமான அன்னபூர்ணி ஆவார். இக்கோயிலில் அன்னபூர்ணேசுவரி தேவியுடன் கிருஷ்ணரும் உள்ளார். பல நூற்றாண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் இருந்த கோயிலுக்கு அன்னபூர்ணேசுவரி கோயிலுக்கு வந்ததாக நம்பப்படுகிறது.[1]

விழா நாளில் கோயில்

வரலாறு தொகு

இக்கோயில் முறைப்படியாக விஷ்ணு/கிருஷ்ணர் கோயிலாகும். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். அன்னபூர்ணேஸ்வரி சிலை அமைத்தபிறகு சிரக்கல் கோவிலகத்தைச் சேர்ந்த அவிட்டம் திருநாள் ராஜ ராஜ வர்மாவால் கோயில் கட்டப்பட்டது. இந்து புராணங்களில் காசியிலிருந்து அம்மன் களரிவதிகள் அம்மா, மடை காவில் அம்மா என்ற இரண்டு தேவிகளுடனும், ஒரு படகோட்டியுடனும் தங்கக் கப்பலில் வந்து, இப்போது ஆயிரம் தெங்கு என்று அழைக்கப்படும் ஆழி தீரத்தில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

சிறப்பு தொகு

ஒரே வகையான பாறைகளால் கட்டப்பட்டுள்ள கோயில் என்ற சிறப்பை இக்கோயில் பெற்றுள்ளது. அன்னபூர்ணேசுவரி, கிருஷ்ணன் ஆகிய இருவரின் கருவறைகளும் இருவருக்கும் சம முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதைக் குறிக்கும் வகையில் வாஸ்து முறைப்படி ஒரே அளவில் உள்ளது. கேரளாவில் உள்ள இரண்டு அன்னபூர்ணேசுவரி கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

விழாக்கள் தொகு

மலையாள நாட்காட்டியில், பூயம் நட்சத்திரத்தில் கும்பம் மாதத்தில் 23 பிப்ரவரி 1994ஆம் நாளன்று புன பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது இப்போது ஒவ்வொரு ஆண்டும் பிரதிஷ்டை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் முக்கிய விழாக்கள் மலையாள மாதமான மேடம் சங்க்ரமத்தில் ( ஏப்ரல் 14/15) தொடங்கி, அடுத்த ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்றவை இக்கோயிலில் கொண்டாடப்படும் மற்ற விழாக்கள் ஆகும்.

நிர்வாகம் தொகு

இக்கோயில் தற்போது மலபார் தேவசம் போர்டின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. கோயில் கமிட்டியால் பராமரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Shalini. "Cherukunnu Annapurneshwari Temple in Kannur Kerala".