கொல்ல ஆண்டு
கேரளத்தில் காலத்தை அறிய கொல்ல ஆண்டு முறையைப் பயன்படுத்துவர், இதை மலையாள ஆண்டு என்றும் அழைப்பர். பொ.ஊ. 823-ல் இந்த ஆண்டு தொடங்கியதாக நம்புகின்றனர்.[1] வேணாட்டு அரசர் உதய மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த ஆண்டினை பயன்படுத்தினார் எனக் கருதுகின்றனர். சிங்கம், கன்னி உட்பட 12 மலையாள மாதங்கள் உள்ளன.
மாதங்கள்
தொகுமலையாள மாதம் | கிரிகோரியன் நாட்காட்டி | தமிழ் மாதம் | சக மாதம் |
---|---|---|---|
சிங்கம் | ஆகஸ்டு - செப்டம்பர் | ஆவணி | ஸ்ராவணம்-பாத்ரம் |
கன்னி | செப்டம்பர்-அக்டோபர் | புரட்டாசி | பாத்ரம்-ஆஸ்வினம் |
துலாம் | அக்டோபர்-நவம்பர் | ஐப்பசி | ஆஸ்வினம்-கார்த்திகம் |
விருச்சிகம் | நவம்பர்-டிசம்பர் | கார்த்திகை | கார்த்திகம்-ஆக்ரஹாயணம் |
தனு | டிசம்பர்-சனவரி | மார்கழி | ஆக்ரஹாயணம்-பௌஷம் |
மகரம் | சனவரி-பிப்பிரவரி | தை | பௌஷம்-மாகம் |
கும்பம் | பிப்பிரவரி-மார்ச்சு | மாசி | மாகம்-பால்குனம் |
மீனம் | மார்ச்சு-ஏப்ரல் | பங்குனி | பால்குனம்-சைத்ரம் |
மேடம் | ஏப்ரல்-மே | சித்திரை | சைத்ரம்-வைசாகம் |
இடவம் | மே-சூன் | வைகாசி | வைசாகம்-ஜ்யேஷ்டம் |
மிதுனம் | சூன்-சூலை | ஆனி | ஜ்யேஷ்டம்-ஆஷாடம் |
கர்க்கடகம் | சூலை-ஆகஸ்டு | ஆடி | ஆஷாடம்-ஸ்ராவணம் |
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ சரித்ரம், பக்கம் 62 கேரளவிஞ்ஞானகோசம் 1988 பதிப்பு