அன்னப்பிரசானம்

அன்னப்பிரசானம் என்பது குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் இந்துக்களின் சடங்குசார் நிகழ்வாகும். இது ஆண் குழந்தைகளுக்கு 6ஆம்,8ஆம் அல்லது 10ஆம் மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7ஆம்,, 9ஆம் அல்லது 11ஆம் மாதங்களிலும் செய்யப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.[1] இவ்வாறு முதன்முதலாக ஊட்டப்படும் சோறு தேனும், தயிரும் நெய்யும் கலந்ததாக ஊட்டப்படும்[2] அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களில் பசுவைக் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. நந்தன வருட திருக்கணித பஞ்சாங்கம், திருக்கணித நிலையம் சாவகச்சேரி
  2. சைவப்புலவர் எஸ். தில்லைநாதன், மட்டக்களப்பில் இந்து கலாசாரம், 2006, மணிமேகலை பிரசுரம், சென்னை-17
  3. http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-kailaasanaathar-thirukoyil-t444.html வலைத்தமிழ்.கொம் , பார்க்கப்பட்ட நாள் 26.03.2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னப்பிரசானம்&oldid=1391226" இலிருந்து மீள்விக்கப்பட்டது