அன்னா பிரேபெல்

அன்னா பிரேபெல் (Anna Frebel) (பிறப்பு:1980, பெர்லின்) ஒரு செருமனி வானியலாளர் ஆவார். இவர் புடவியின் மிகப் பழைய விண்மீன்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வை மேற்கொண்டார்.

வாழ்க்கை

தொகு

அன்னா பிரேபெல் செருமனியின் கோட்டிங்கனில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடிந்ததும், பிரீபர்கு இம் பிரீசுகாவு]] வில் இயற்பியல் பயின்றார். இவர் மேலும் தன் கல்வியினை ஆத்திரேலியாவில் தொடர்ந்து கான்பெராவில் உள்ள ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் மவுண்ட் சுட்டிராம்லோ வான்காணகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் 2006 இல் ஏ, டபுள்யூ. ஜே. மெக்டொனால்டு முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்று ஆசுட்டினில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.

இவர் 2009 முதல் 2011 வரை மசாசூசட்டில் அமைந்த கேம்பிரிட்ஜ் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் கிளே முதுமுனவர் ஆய்வாளராகவிருந்தார். இவர் 2012 இல் இருந்து மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியல் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார்.

இவர் 2005 இல் HE 1327-2326 எனும் விண்மீனைக் கண்டுபிடித்தார். இது பெருவெடிப்பு முடிந்த்துமே தோன்றிய இரும்பு குறைவாகவுள்ள விண்மீனாகும். இவர் 2007 இல் HE 1523-0901 எனும் செம்பெருமீனைக் கண்டுபிடித்தார். இது 13.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய விண்மீனாகும்.

தகைமைகளும் விருதுகளும்

தொகு

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

தொகு
  • (in German) Auf der Suche nach den ältesten Sternen, Frankfurt am Main: Fischer, 2012, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-10-021512-3 
  • Astronomical Society of the Pacific, தொகுப்பாசிரியர். (2008) (in German), New horizons in astronomy : Frank N. Bash Symposium 2007 : proceedings of a workshop held at the University of Texas, Austin, Texas, USA, 14–16 October 2007, San Francisco 

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_பிரேபெல்&oldid=3704398" இலிருந்து மீள்விக்கப்பட்டது