அன்னா பொச்
அன்னா பொச் (Anna Boch) (10 பெப்ரவரி 1848 – 25 பெப்ரவரி 1936) ஒரு பெல்சிய ஓவியர் ஆவார். எனூவில் உள்ள சான் வா (Saint-Vaast, Hainaut) என்னும் இடத்தில் பிறந்த இவர் 1936ல் பெல்சியத்தில் உள்ள பிரசெல்சில் இக்செல் என்னும் இடத்தில் காலமானார்.
அன்னா பொச் | |
---|---|
பிறப்பு | 10 பெப்பிரவரி 1848 Saint-Vaast |
இறப்பு | 25 பெப்பிரவரி 1936, 1936 (அகவை 88) Ixelles - Elsene, பிரசெல்சு நகரம் |
கல்லறை | Ixelles Cemetery |
குடும்பம் | Eugène Boch |
இவர் புது-உணர்வுப்பதிவுவாத இயக்கத்தில் பங்குபற்றியிருந்தார். இவரது தொடக்ககால ஆக்கங்களில் புள்ளியிய நுட்பத்தைப் பயன்படுதினார். ஆனாலும், அவர் ஓவியராக இருந்த காலத்தில் பெரும்பகுதியில் பயன்படுத்திய உணர்வுப்பதிவுவாதப் பாணிக்காகவே அவர் பெரிதும் அறியப்பட்டார். இசிடோர் வெர்கைடனின் (Isidore Verheyden) மாணவரான இவர், தியோ வான் ரிசெல்பர்க்கின் (Théo van Rysselberghe) செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தார்.
சேகரிப்புகள்
தொகுதன்னுடைய சொந்த ஓவியங்களைத் தவிர, பிற ஓவியர்கள் வரைந்த உணர்வுப்பதிவுவாத ஓவியங்களின் முக்கியமான சேகரிப்பு இவரிடம் இருந்தது.[1] இவரது சகோதரரின் நண்பரும் திறமையான ஓவியருமான வின்சென்ட் வான் கோ உடபடப் பல இளம் ஓவியர்களுக்கு இவர் ஊக்கம் அளித்தார். அன்னா பொச், வான் கோவிடம் இருந்து வாங்கிய சிவப்புத் திராட்சைத் தோட்டம்[2] (The Vigne Rouge) என்னும் ஓவியமே வான் கோ தனது ஆயுட் காலத்தில் விற்பனை செய்த ஒரே ஓவியமாகக் கருதப்பட்டது. அன்னா பொச்சின் சேகரிப்புக்கள் அவரது இறப்பின் பின்னர் விற்கப்பட்டன. இதன் மூலம் கிடைத்த பணம், ஏழை ஓவிய நண்பர்களின் ஓய்வுக்கால வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என எழுதி வைத்திருந்தார்.