புது-உணர்வுப்பதிவுவாதம்
புது-உணர்வுப்பதிவுவாதம் (Neo-Impressionism) என்பது, யோர்ச் சோராவினால் உருவாக்கப்பட்ட ஒரு கலை இயக்கம் ஆகும். சோராவின் புகழ்பெற்ற லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் என்னும் ஓவியம், இவ்வியக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. இது முதன் முதலாகப் பாரிசில் இடம்பெற்ற கண்காட்சியொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.[1] இக்காலப் பகுதியிலேயே பிரான்சில் நவீன காலத்தின் உச்ச கட்டம் உருவாகியிருந்தது. பல ஓவியர்கள் புது வழிமுறைகளைத் தேடத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக புது-உணர்வுப்பதிவுவாதத்தைப் பின்பற்றியவர்கள் நகரம், நிலத்தோற்றம், கடற்கரைகள் சார்ந்த நவீனக் காட்சிகளை வரைவதில் அக்கறை காட்டினர். கோடுகள், நிறங்கள் என்பவை தொடர்பான அறிவியல் அடிப்படையிலான விளக்கங்கள், புது-உணர்வுப்பதிவுவாதிகளின் சமகால ஓவியங்களின் பண்புருவாக்கத்தின்மீது செல்வாக்குச் செலுத்தின.[2] இது தொடர்பில் புள்ளியிய, பிரிப்பிய நுட்பங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஏனெனில், புது-உணர்வுப்பதிவுவாத இயக்கத்தின் தொடக்ககாலத்தில் மேற்படி நுட்பங்களே முதன்மையான நுட்பங்களாக விளங்கின.
புது-உணர்வுப்பதிவுவாதமே ஓவியத்தில் முதல் உண்மையான புதிய அலையை உருவாக்கிய இயக்கம் எனச் சிலர் வாதிடுகின்றனர்.[3] 19 ஆம் நூற்றாண்டில் ஒரு இயக்கத்தை விரைவாக உருவாக்க புது-உணர்வுப்பதிவுவாதிகளால் முடிந்தது. பிந்திய கலை வெளிப்பாட்டுக்கு வழி சமைத்த அரசின்மையியத்துடன் இவ்வியக்கத்துக்கு இருந்த வலுவான தொடர்பு இதற்கு ஒரு காரணம்.[3] அக்கால அறிவியல், அரசின்மைக் கோட்பாடு, கல்விசார் ஓவியங்கள் குறித்த அக்கால வாதங்கள் என்பவற்றிடையே ஒரு இசைந்த நோக்கை ஏற்படுத்தும் முயற்சியே இந்த இயக்கமும், பாணியும் ஆகும்.
புது-உணர்வுப்பதிவுவாத ஓவியர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hutton, John G. (2004). Neo-Impressionism and the Search for Solid Ground: Art, Science, and Anarchism in Fin-de-siecle France. Baton Rouge, Louisiana: Louisiana State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8071-1823-0.
- ↑ Lee, Ellen W.; Smith, Tracy E. (1983). Edelstein, Debra (ed.). The Aura of Neo-Impressionism: The W. J. Holliday Collection. Indianapolis, Indiana: Indianapolis Museum of Art, [dist. by] Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-936260-04-1.
- ↑ 3.0 3.1 Ward, Martha (1996). Pissarro, Neo-Impressionism, and the Spaces of the Avant-Garde. The University of Chicago Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-87324-2. பார்க்கப்பட்ட நாள் 25 March 2015.