அன்னா போரிசோக்லெப்ஸ்கயா
அன்னா இவானிவ்னா போரிசோக்லெப்ஸ்காயா (Anna Ivanivna Borisoglebskaya, உக்ரைனியன்: Га́нна Іва́нівна Борисоглі́бська; 1868-1939) என்பவர் ஒரு உக்ரேனிய நடிகை மற்றும் உக்ரைனிய சோவியத் சோசலிசக் குடியரசின் மக்கள் கலைஞர் (1936) ஆவார்.
அன்னா போரிசோக்லெப்ஸ்கயா | |
---|---|
Га́нна Борисоглі́бська | |
தாய்மொழியில் பெயர் | Га́нна Борисоглі́бська |
பிறப்பு | 1868 செபேஜ், விட்டெப்ஸ்க் கவர்னரேட், உருசியப் பேரரசு |
இறப்பு | செப்டம்பர் 29, 1939 கீவ், சோவியத் ஒன்றியம் | (அகவை 70–71)
பணி | நடிகை |
விருதுகள் | உக்ரைனிய சோவியத் சோசலிசக் குடியரசின் மக்கள் கலைஞர் |
துவக்க ஆண்டுகள்
தொகுஅன்னா போரிசோக்லெப்ஸ்காயா 1868 இல், விட்டெப்ஸ்க் கவர்னரேட்டில் (இன்றைய பிஸ்கோவ்) செபேஜ் நகரில் பிறந்தார்.[1] போரிசோக்லெப்ஸ்காயா தனது குழந்தைப் பருவத்தை கார்கோவ் கவர்னரேட்டில் உள்ள இசியம் நகரத்தில் கழித்தார். மேலும் கார்கோவில் உள்ள அறக்கட்டளை சங்கப் பள்ளியில் கல்வி கற்றார். 1886 ஆம் ஆண்டில், இவர் கார்கோவ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியருக்கான தேர்வு எழுதினார், அதே ஆண்டில் இஸ்யம்ஸ்கி உயெஸ்டில் உள்ள நோவோசெலோவ்கா கிராமத்தில் ஆசிரியராக கற்பிக்கத் தொடங்கினார்.[2][3]
போரிசோக்லெப்ஸ்காயா 1939 செப்டம்பர், 29, 1939 அன்று கீவில் இறந்தார்.[1] பின்னர் இவரது உடல் கீவில் உள்ள பைகோவ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது கல்லறையானது உக்ரேனிய நாடக நடிகர் சங்கத்தால் பராமரிக்கப்படுகிறது.
தொழில்
தொகுதனது குழந்தை பருவத்திலிருந்தே, போரிஸ்லெப்ஸ்காயா நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் 1888 இல் நாடகவியலாளரான மார்கோ கிரோபிவ்னிட்ஸ்கியின் அழைப்பின்பேரில் தொழில்முறை நடக மேடையில் அடியெடுத்து வைத்தார்.[3] போரிஸ்லெப்ஸ்காயா 1902 வரை கிரோபிவ்னிட்ஸ்கியின் குழுவுடன் இணைந்து பணியாற்றினார்,[1] பின்னர் பனாஸ் சக்சஹான்ஸ்கி மற்றும் இவான் கார்பென்கோ-காரியின் குழுவுடன் நான்கு நான்கு ஆண்டுகள் கழித்தார். 1906-1907 இல், அவர் சிசெப்கின் மற்றும் கோல்ஸ்னிச்சென்கோ நாடகக் குழுக்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1907 முதல் 1917 வரை, அவர் கீவில் நிகோலாய் சடோவ்ஸ்கி தலைமையிலான நிலையாக நாடக் குழுவில் பணியாற்றினார்.
இவர் ரிண்டிச்ச்கா, டெக்லியா, கப்கா, வர்வாரா ("அன்டில் தி சன் ரைசிங், நியூ ஈட் ஐஸ்," "ஜெய்டிகோலோவா," "சமிர்" எழுதிய கிரோபிவ்னிட்ஸ்கி), செக்லெட்டா, வுஸ்தியா ("சேசிங் டூ ஹேர்ஸ்," "ஓ, கிரைட்ஸ், ஸ்டாரிட்ஸ்கி எழுதிய டோன்ட் கோ..."), ஹன்னா ( கார்பென்கோ-காரி எழுதிய "டேலண்டடு), தாய் (கார்பென்கோ-காரி எழுதிய நடகமான "சூட்டா" மற்றும் லெசியா உக்ரைன்கா எழுதிய "தி ஃபாரஸ்ட் சாங்" ), ஸ்டேகா (ஷெவ்செங்கோ எழுதிய "நாசர் ஸ்டோடோல்யா"), சிகாண்டிபிகா (பனாஸ் மைர்னி எழுதிய "லிமெரிவ்னா"), மசாய்லிகா (மைகோலா குலிஷி எழுதிய "மினா மசாய்லோ") போன்ற பலவிதமான நாடக கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.[4]
1919 ஆம் ஆண்டில், போரிசோக்லெப்ஸ்காயா டி. ஜி. ஷெவ்சென்கோ என்ற பெயரில் உருவாக்கபட்ட முதல் உக்ரேனிய அரசு நாடக அரங்கின் நிறுவனர்களில் ஒருவராக ஆனார். (இப்போது டினிப்ரோ நகரில் — தாராஸ் ஷெவ்சென்கோ டினிப்ரோ கல்வி உக்ரேனிய இசை மற்றும் நாடக அரங்கம்).[4] 1920 முதல் 1925 வரை, இவர் மேற்கு உக்ரைனில் இருந்தார், அங்கு இவர் பல்வேறு நாடகக் குழுக்களுடன், குறிப்பாக ஓரெல்-ஸ்டெப்னியாக் போன்றவறில் இணைந்து நடித்தார்.[5]
1925 முதல் இவரது வாழ்க்கையின் இறுதி வரை, இவர் கீவில் உள்ள தி இவான் பிராங்கோ நாடக அரங்கில் பணியாற்றினார்.[4][1] அங்கே இவர் ஓரினா (குலிஷ் எழுதிய "97"), கிளாரா (அஃபனாசியேவின் "பயம்"), மார்ஃபா, வர்வாரா ("உண்மை," "போஹ்டன் க்மெல்னிட்ஸ்கி" கோர்னிச்சுக்). போன்ற நாடகக் கதாபாத்திரங்களை உருவாக்கினார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Веселовська, Г. І. Борисоглібська Ганна Іванівна (in Ukrainian). Vol. 3. Інститут енциклопедичних досліджень НАН України. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-02-2074-4.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Анна Борисоглебская: свекровь и мать" (in ru). ZN.ua. https://zn.ua/ART/anna-borisoglebskaya-svekrov-i-mat-264291_.html.
- ↑ 3.0 3.1 "Народна "баба"". day.kyiv.ua (in உக்ரைனியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.
- ↑ 4.0 4.1 4.2 4.3 பாரிய சோவியத் கலைக்களஞ்சியத்தில் அன்னா போரிசோக்லெப்ஸ்கயா, 1969–1978 (உருசியம்)
- ↑ М.Йосипенко (1941). "Г.І.Борисоглібська". Театр (3): 21–22. https://elib.nlu.org.ua/mobile/#/view/2129.