அன்னா மரியா பால்

அன்னா மரியா பால் ( Anna Maria Ball ) பின்னர் அன்னா மரியா ஓ பிரையன் (1785 - 28 மார்ச் 1871) என ஆன இவர் ஓர் ஐரிய பரோபகாரர் ஆவார் . [1]

அன்னா மரியா பால்
பிறப்பு1785
5 வெர்பர்க் தெரு, டப்லின்
இறப்பு28 March 1871 (அகவை 85–86)
மவுண்ட்ஜாய் சதுக்கம், டப்லின்
தேசியம்ஐரியர்

வாழ்க்கை தொகு

அன்னா மரியா பால் 1785 இல் டப்லின் நகரில் 5 வெர்பர்க் தெருவில் பிறந்தார். இவர், பட்டு வியாபாரியான ஜான் பால் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மேபெல் கிளேர் (என்கிற பென்னட்) ஆகியோரின் இரண்டாவது மகள். இவரது சகோதரர் நிக்கோலஸ் பால், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் ரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவர். மேலும் இவரது சகோதரிகளில் ஒருவரான பிரான்சிஸ் மேரி தெரசா பால் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட பெண்களின் உரோமன் கத்தோலிக்க மத சபையான லொரேட்டோ சகோதரிகளில் ஒருவராக இருந்தார். அன்னா மரியா பால் ஜூலை 1800 முதல் 1803 வரை யார்க்சயரில் உள்ள மிக்லேகேட் பார், புனித மேரி பள்ளியில் கல்வி பயின்றார். டப்ளினுக்குத் திரும்பியதும், இவர் தனது தொண்டுப் பணிகளைத் தொடங்கினார். நவம்பர் 1805 இல், இவர் ஒரு செல்வந்தரான ஜான் ஓ'பிரைன் என்ற வணிகரை மணந்தார். இவரது கணவர் இவருக்கு வரதட்சணையாக 5000 பவுண்டுகளை அளித்தார். [2]

தொண்டுப் பணிகள் தொகு

1807 ஆம் ஆண்டில் கார்க்கில் உள்ள உர்சுலின்சில் தனது மூத்த சகோதரி சிசிலியாவின் தொண்டுப் பணிகளில் உதவச் செல்லும்போது , செவிலியரான மேரி ஐக்கென்கெட் உடன் நட்பு கொண்டார். [3] மவுண்ட்ஜாய் சதுக்கத்தில் உள்ள அன்னாவின் வீட்டிற்கு ஐக்கன்கெட் அடிக்கடி வந்து சந்தித்தார். மேலும் இவர்கள் மூவரும் டப்லின் ஏழைகளுக்கு உதவ திட்டமிட்டனர். அன்னா மரியா டப்லினின் வருங்கால பேராயர் டேனியல் முர்ரேயின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவர் தனது மத சகோதரிகள் அறக்கட்டளை மூலம் ஐக்கென்கெட்டிற்கு உதவினார். 1809 ஆம் ஆண்டில், அன்னா மரியா ஒரு அனாதை இல்லத்தை நிறுவுவதில் ஈடுபட்டார். 1833 இல் புனித வின்சென்ட் மருத்துவமனைக்கான நிதி சேகரிப்பில் உதவினார். 1833 இல் செவிலியம் படிக்க மூன்று சகோதரிகளை பாரிசுக்கு அழைத்துச் சென்றார். சகோதரிகளுடன், பால் கில்மைன்ஹாம் கோலில் உள்ள பெண் கைதிகளையும் ஜெர்விஸ் சாலை மருத்துவமனையில் நோயாளிகளையும் சந்தித்தார். பின்னர், கிங்ஸ் இன்ஸ் தெருவில் உள்ள சகோதரிகள் பள்ளியின் மேலாளராக அன்னா மரியா பால் நியமிக்கப்பட்டார். அங்கு தனது முதுமை வரை அங்கு மேற்பார்வையிட்டார். அன்னா மரியா பால் அயர்லாந்தில் உள்ள லோரெட்டோ சகோதரிகளை ஆதரித்தார். இது அவரது இளைய சகோதரி பிரான்சிஸ் மேரி தெரசா பால் என்பவரால் நிறுவப்பட்டது. சகோதரிகளுக்கு புனித இசுடீவன் கிரீனில் உள்ள வீட்டை வாங்குவதற்கு இவர் நிதி திரட்டினார்.

இறப்பு தொகு

அன்னா மரியா பாலுக்கு சொந்தமாக குழந்தைகள் இல்லை. ஆனால் இவர் மூன்று அனாதை குழந்தைகளை வளர்த்தார். 1812 இல் இறந்த பிறகு இவரது மூத்த ஒன்றுவிட்ட சகோதரர் ஜான் பால் . அந்தக் குழந்தைகளை கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளாக முதுமை நோயால் அவதிப்பட்டு வந்த அன்னா மரியா , 1871 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி மவுண்ட்ஜாய் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் இறந்தார். 1845 இல் நிக்கோலஸ் ஜோசப் கிரோலி என்ற ஓவியரால் வரையப்பட்ட அன்னாவின் உருவப்படம் மத சகோதரிகள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. Clarke, Frances (2009). "Ball, Anna Maria". In McGuire, James; Quinn, James (eds.). Dictionary of Irish Biography. Cambridge: Cambridge University Press.
  2. 2.0 2.1 Clarke, Frances (2009). "Ball, Anna Maria". In McGuire, James; Quinn, James (eds.). Dictionary of Irish Biography. Cambridge: Cambridge University Press.Clarke, Frances (2009). "Ball, Anna Maria". In McGuire, James; Quinn, James (eds.). Dictionary of Irish Biography. Cambridge: Cambridge University Press.
  3. Matthew, H. C. G.; Harrison, B., eds. (2004-09-23), "The Oxford Dictionary of National Biography", The Oxford Dictionary of National Biography, Oxford: Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/56306, பார்க்கப்பட்ட நாள் 2023-07-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_மரியா_பால்&oldid=3898942" இலிருந்து மீள்விக்கப்பட்டது