அன்னா வாட்சு
அன்னா வாட்சு (Anna Watts) ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகத்தல் ஒரு வானியற்பியல் இணைப்பேராசிரியர் ஆவார். இவர் நொதுமி விண்மீன்களையும் அவற்றின் வெப்ப அணுக்கரு வெடிப்புகளைப் பற்ரியும் ஆய்வு செய்கிறார்.
அன்னா வாட்சு Anna Watts | |
---|---|
பணியிடங்கள் | ஆம்சுட்டர்டாம் பல்கலைக்கழகம் கோடார்டு விண்வெளி பறப்பு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நொதுமி விண்மீன்கள் |
கல்வி
தொகுவாட்சு பிராடுபோர்டு மகளிர் இலக்கணப் பள்ளீயில் படித்தார்.[1] இவர் ஆக்சுபோர்டு மெர்ட்டன் கல்லூரியில் இயற்பியல் படித்து, 1995 இல் முதல் வகுப்பில் இளவல் பட்டம் பெற்றார்.[2] இவர் பிரித்தானியத் தற்காப்பு அமைச்சகப் பட்ட மாணவர் திட்டத்தில் சேர்ந்து ஐந்தாண்டுகள் பணிபுரிந்தார்.[2] இவர் இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்காக நீல்சு ஆண்ட்ர்சனின் பொது சார்பியல் குழுவில் சேர்ந்து நொதுமி விண்மீன்கள் ஆய்வில் ஈடுபட்டார்.[2][3]
வாழ்க்கைப்பணி
தொகுமுனைவர் பட்டம் முடித்த பிறகு, வாழ்சிங்டன் டி.சி சென்று, இவர் கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகச் சேர்ந்தார்.[3][4] பிரகு இவர் மூனிச்சில் உள்ள மாக்சு பிளாங்க் வனியற்பியல் நிறுவன ஆய்வுநல்கையைப் பெற்றார்.[3][5] இவர் 2008 இல் அந்தோனி பென்னகோயக் நிறுவனத்தில் சேர்ந்தார்.[1]
வாட்சு நொதுமி விண்மீன்களில் நிகழும் வெடிப்பு இயக்க நிகழ்வுகளின் இயற்பியலைப் புரிந்துகொள்ல முயன்றார். இவற்றில் காந்த்த் தெறிப்புகளும் வெப்ப அணுக்கரு வெடிப்புகளும் விண்மீன் நடுக்க அதிர்ச்சிகளும் அடங்கும்.[6] இவரது ஆய்வு கோட்பாட்டு இயற்பியல், வானியற்பியல் அகிய இருபுலங்களின் இடைமுகத்தில் அமைகிறது. இவர் தோடு சுட்டிரோமேயருடன் இணைந்து நொதுமி விண்மீன்களின் உள்மறைந்த கட்டமைப்பை இனங்கண்டுள்ளார்; இதன் ஒரு 1.6 கிமீ முகட்டுப் பொருளின் ஒரு தேக்கண்டி 10 மில்லியன் டன்கள் ஆக அமைவதை அறிந்துள்ளார்.[7] இவர் 2014 இல் நொதுமி விண்மீன் வெடிப்புகளின் இயற்பியலை ஆய்வதற்காக 1.5 மில்லியன் பவுண்டுகள் ERC தொடக்க நல்கையாகப் பெற்றார்.[8]
இவர் எதிர்கால உயர் ஆற்றல் தொலைநோக்கி உருவாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.[6] இவர் நாசாவின் சுட்டிரோபு-X ஆய்கல அறிவியல் குழுவில் உள்ளார்.[9] சீன-ஐரோப்பிய X-கதிர் நேர அமைவு, முனைவளவியல் மேம்பாட்டு இல்க்குத் திட்ட்த்தில் இவர் அடர்ப்ருள் அறிவியல் பணிக்குழுவின் தலைவர் ஆவார்.[10][11] இவர் வானியலுக்கான நெதர்லந்து ஆராய்ச்சிப் பள்ளியின் நோவா வலையமைப்பு 3 இன் தலைவர் ஆவார்.[12] இவர் ஐரோப்பிய றிவியல் தொழில்நுட்ப் கூட்டுறவுக் குழுவில் உள்ளார்.[13] வாட்சு டைம்சு உயர்கல்வி, வைசு ஆகிய இதழ்களில் தன் கட்டுரைப் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார்.[14][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Wijngaarden, Evert Rol, Martin Heemskerk, David Hendriks, Timo Halbesma, Marcella. "API - Alumus - Dr. Anna Watts". api-alumni.nl (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 2.0 2.1 2.2 Woods, Karen. "Dr Anna Watts" (PDF). University of Southampton. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 3.0 3.1 3.2 "Anna Watts | Mathematical Sciences | University of Southampton". www.southampton.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "NASA - NASA Sees Hidden Structure of Neutron Star in Starquake". www.nasa.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "MPA :: Current Research Highlight :: May 2006". wwwmpa.mpa-garching.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ 6.0 6.1 Amsterdam, Universiteit van. "dr. A.L. (Anna) Watts - University of Amsterdam". www.uva.nl (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "MPA :: Current Research Highlight :: May 2006". wwwmpa.mpa-garching.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ Amsterdam, Universiteit van. "ERC Starting Grants awarded to Faculty of Science researchers - University of Amsterdam". www.uva.nl (in ஆங்கிலம்). Archived from the original on 2018-03-17. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "The STROBE-X Team". NASA. Archived from the original on 2019-08-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "WG4 - Observatory Science". www.isdc.unige.ch (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "WG1 - Dense Matter". www.isdc.unige.ch (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "72nd Netherlands Astronomy Conference". www.astronomenclub.nl (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "COST | The multi-messenger physics and astrophysics of neutron stars - Management Committee". www.cost.eu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
- ↑ "Astrophysics for People in a Hurry, by Neil deGrasse Tyson" (in en). Times Higher Education (THE). 2017-06-08. https://www.timeshighereducation.com/books/review-astrophysics-for-people-in-a-hurry-neil-degrasse-tyson-w-w-norton.
- ↑ "For Female Astronomers, Sexual Harassment Is a Constant Nightmare" (in en-us). Broadly. 2016-04-07. https://broadly.vice.com/en_us/article/4xkzjd/youre-targeted-sexually-how-female-astronomers-are-being-hounded-out-of-work.