அன்னியூர் சிவா
அன்னியூர் சிவா் என்கிற சிவசண்முகம் (Anniyur Siva-பிறப்பு 3 ஏப்ரல் 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதியும் ஆவார். சிவா விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதிக்கு) சூலை 2024-இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[1]
குடும்பம்
தொகுசிவாவிற்கு வனிதா என்ற மனைவியும், அர்சிதா சுடர் என்ற மகளும், திரிலோக் அரி என்ற மகனும் உள்ளனர்.
அரசியல்
தொகு- 1996ஆம் ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவர்.
- 2020ஆம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளர்.
- 2022ஆம் ஆண்டு விவசாய தொழிலாளர் அணி செயலாளர்.[2]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதியின்) உறுப்பினர் நா. புகழேந்தி மறைவின் காரணமாக, 10 சூலை 2024 அன்று இடைத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவா, பாமகவின் அன்புமணியை வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bureau, The Hindu (2024-06-11). "DMK fields Anniyur Siva as candidate for Vikravandi byelection". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-07-19.
- ↑ https://tamil.oneindia.com/news/villupuram/who-is-this-anniyur-siva-the-history-of-the-future-mla-of-vikravandi-constituency-621255.html%7Ctitle= யார் இந்த அன்னியூர் சிவா
- ↑ "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி". BBC News தமிழ். 2024-07-19. பார்க்கப்பட்ட நாள் 2024-07-19.