நா. புகழேந்தி

நா. புகழேந்தி (N. Pugazhenthi) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், அத்தியூர் திருவாதித்தினைச் சார்ந்த புகழேந்தி உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றுள்ளார்.[1] திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியுற்றார்.[2] பின்னர் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] புகழேந்தி விழுப்புரம் மத்திய மாவட்ட, திமுக மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.[4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._புகழேந்தி&oldid=3382037" இருந்து மீள்விக்கப்பட்டது