அன்னையின் மெழுகு அருங்காட்சியகம்
அன்னையின் மெழுகு அருங்காட்சியகம் (Mother's Wax Museum ) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நியு டவுன் என்னும் நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டது. இங்கு 19 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. பிரபல இந்தித் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கான் ஆகியோரின் சிலைகளும் இவற்றில் அடங்கும்[1]. அன்னை தெரேசாவின் நினைவாக அருங்காட்சியகத்திற்கு அன்னையின் மெழுகு அருங்காட்சியகம் எனப் பெயர் சூட்டப்பட்டது[2].
நிறுவப்பட்டது | நவம்பர் 2014 |
---|---|
அமைவிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Country's first wax museum opens up in Kolkata". 14 November 2014. http://www.deccanherald.com/content/440804/country039s-first-wax-museum-opens.html. பார்த்த நாள்: 4 November 2015.
- ↑ "Amitabh Bachchan and Shah Rukh Khan's wax statues at Kolkata's wax museum". 3 November 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Amitabh-Bachchan-and-Shah-Rukh-Khans-wax-statues-at-Kolkatas-wax-museum/articleshow/45022680.cms. பார்த்த நாள்: 4 November 2015.