அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை (நூல்)

அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை, ப. தங்கம் எழுதிய, அமெரிக்காவிற்கு அவர் சென்ற பயணம் தொடர்பான நூலாகும். [1] இந்நூல் தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருதைப் பெற்றதாகும். [2]

அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை
நூல் பெயர்:அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை
ஆசிரியர்(கள்):ப. தங்கம்
வகை:வரலாறு
துறை:பயண வரலாறு
இடம்:தஞ்சாவூர் 613 501
மொழி:தமிழ்
பக்கங்கள்:284
பதிப்பகர்:தங்கப்பதுமை பதிப்பகம்
பதிப்பு:2003
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு தொகு

இந்நூலில் அமெரிக்காவில் தான் மேற்கொண்ட பயணத்தின்போது எதிர்கொண்ட அனுபவங்களை எழுதியுள்ளார். உலகிலேயே சிறப்பு மிக்க கார் கண்காட்சி, அமெரிக்காவில் தமிழ் சினிமா, கிறிஸ்துமஸ் அபூர்வ நகரம், காசி விசுவநாதர் ஆலயம், அமெரிக்காவில் காந்தியின் கை ராட்டை, பெருமைக்குரிய பெண்ணரசி சுதந்திரதேவி, நியூயார்க் பெயர்க்காரணம், வெள்ளை மாளிகை, விண்வெளி பயண அதிசயம், வரலாற்று காட்சி அரங்கம், உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் தனது கண்ணோட்டத்தைப் பகிர்ந்துள்ளார்.

உசாத்துணை தொகு

'அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை', நூல், (2003; தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர், 6ஆவது தெரு மேற்கு, மாரியம்மன் கோயில், தஞ்சாவூர்)

மேற்கோள்கள் தொகு

  1. "Connemara Public Library". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  2. ஓவியம்: ஆலயங்களில் ஓவிய தரிசனம்!, தினமணி, மார்ச் 7, 2010