அன்னை மரிய லூயிஸ் டி மீஸ்டர்

அன்னை மரிய லூயிஸ் டி மீஸ்டர் (Marie Louise De Meester) ( 8 ஏப்ரல் 1857 - 10 அக்டோபர 1928) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் முளகுமூடுவில் ஜ.சி.எம் என்ற " மரியாயின் மாசற்ற இருதய வேத போதக அருட்சகோதரிகள்" சபையை நிறுவியவர் ஆவார். இவர் நிறுவிய சமையானது கல்வி மருத்துவம் மற்றும் சமுகப்பணிகள் வழியாக மக்களுக்கு சேவைபுரிந்துவருகிறது.[1]

முன்வாழ்கைதொகு

இவர் பெல்ஜியம் நாடட்டிலுள்ள ருசலார் என்ற இடத்தில் 1857 ஏப்ரல் 8இல் பிறந்தார். ஆசிரியராக பணி புரிந்த இவர், அகஸ்டீனியன் சபையில் சேர்ந்து துறவற வாழ்வை மேற்கொண்டார். அக்காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின் தென்பகுதியான திருவாங்கூரில் உள்ள முளகுமூடு என்ற ஊரில் மிகுதியான அனாதைகள் மிசனரிகளால் பராமரிக்கப்பட்டு வந்தனர். அவர்களை கவனித்து வந்த ஓ.சி.டி குருவானவர் பெல்ஜியம் நாட்டு செயின்ட் அகஸ்டீனியன் சபைக்கு ஒரு கடிதம் எழுதி கைவிடப்பட்டவர்களை கவனிக்க இரண்டு பேரை அனுப்ப கேட்டிருந்தார்.[2] அந்த விவரத்தை அறிந்த சகோதரி மரிய லுாயிஸ் டி மீஸ்டர் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்து அவருடன் நவ கன்னியாகிய ஊர்சலாவும் அனுப்பப்பட்டனர். கடினமான கடல் வழி பயணம் மேற்கொண்டு இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளகுமூடு ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

பணிகள்தொகு

அங்கு கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இல்லத்தின் பொறுப்பை ஏற்றார்.[3] ஏழை பெண்களின் வாழ்வாதரத்துக்காக கைத்தொழில் கற்று தந்தார். அதில் திறமை வாய்ந்த பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து, அவர்களை குழந்தைகளுக்கு ஆசிரியராகும் வாய்ப்பைக் கொடுத்தார். பிற்காலத்தில் இதற்கு அரசு உதவி வழங்கி அங்கீகரித்தது. இது தற்போது குழந்தை இயேசு ஆசிரியர் பயிற்சி பள்ளியாக இயங்கி வருகிறது.

அக்காலகட்டத்தில் ஏழை பெண்கள் வாழ்வாதாரத்திற்காக துவங்கப்பட்ட தையல் வகுப்பாதனது தற்போது குழந்தை இயேசு தையல் பயிற்சி பள்ளியாக விளங்குகிறது. பின் அங்கிருந்து ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பள்ளியாடி, குலசேகரம், வெள்ளியாவிளை, ஆசாரிப்பள்ளம், ரீத்தாபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்த பள்ளிகளை அங்கீகரித்த அரசு ஆசிரியர்களுக்கு கற்பிப்பு மானியமும் பள்ளி மானியமும் வழங்கி அருட்சகோதரிகளின் சேவை மனப்பான்மையை அங்கீகரித்தது. இதன் பின் அருட்சகோதரிகள் மற்ற நாடுகளிலும் தங்கள் சேவையை விவிவாக்கம் செய்தனர்.

இவ்வாறு விரிவாக்கம் அடைந்த மரியாயின் மாசற்ற இருதய வேத போதக சபையானது பிலிப்பைன்ஸ், சீனா, அமெரிக்கா, பெல்ஜியம், காங்கோ, பிரேசில், புருண்டி, கேமருன், கரிபியன், குவத்தமாலா, காங்காங், இத்தாலி, மங்கோலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தனது கல்வி மருத்துவம் மற்றும் சமுகப்பணிகள் வழியாக மக்களுக்கு சேவைபுரிகிறது.[3]

மறைவுதொகு

அன்னை மரிய லுாயிஸ் டி மீஸ்டர் 1928 அக்டோபர் 10ஆம் நாள் பெல்ஜியத்தில் உள்ள கெவர்லேயில் காலமானார். அவரால் தொடங்கப்பட்ட பணிகள் இன்னும் பல்வேறு இடங்களில் ஜ.சி.எம் அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டுவருகிறது.

மேற்கோள்கள்தொகு

  1. "ICM Superior GeneJanuary 2013". St. Louis School Center. மூல முகவரியிலிருந்து 2013-02-22 அன்று பரணிடப்பட்டது.
  2. "The Arrival of the ICM Missionaries". Municipality of Tagudin (2004). பார்த்த நாள் 6 January 2013.
  3. 3.0 3.1 "History and Legacy". Missionary Sisters of the Immaculate Heart of Mary (2008). மூல முகவரியிலிருந்து 14 August 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 January 2013.