அன்ன காதறீன வளயில்

இந்திய இசைக்கலைஞர்

அன்ன காதறீன வளயில் (Anna Katharina Valayil, மலையாளம்: അന്ന കാതറീന വളയിൽ) என்பவர் ஒரு இந்திய இசைக்கலைஞர் ஆவார். இவர் மலையாளம் [1] மற்றும் தமிழ் மொழிகளில் பாடியுள்ளார். இவரது பாடல் "அப்பங்கள் எம்பதும்" உஸ்தாத் ஹோட்டல் திரைப்படத்தில் தோன்றியது.

அன்ன காதறீன வளயில்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Ann Varghese
பிறப்பு13 சூன் 1984 (1984-06-13) (அகவை 40)
கோட்டயம், இந்தியா
இசை வடிவங்கள்Electro pop  • Afro funk  • Jazz  • Reggae
தொழில்(கள்)Singer • Songwriter  • Composer  • Pilot
இசைத்துறையில்2010–present

வாழ்க்கை

தொகு

இவர் இந்தியாவில் பிறந்து பின்னர் நைஜீரியாவுக்கு குடிபெயர்ந்தார். இவர் கொச்சியில் உள்ள புனித தெரசா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார், ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தில் ஊடகப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் மூன்று வருடங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் பாரம்பரிய இசையைப் கற்றார். அவரது முதல் இசை காணொளி "ஹனி பீ" ஆகும்.

இவர் கோபி சுந்தர், சந்தோஷ் சந்திரன் மற்றும் மார்த்தியன் ஆகியோருடன் ஒத்துழைத்து. 2012 இல் கொச்சி டைம்ஸ் திரைப்பட விருதுகளில் சிறந்த பாடகிக்கான விருதை வென்றார். அடுத்த ஆண்டு இவர் ஜி.எம்.எம்.ஏ விருதுகளில் சிறந்த அறிமுகக் கலைஞருக்கான விருதையும், மலையாளத் திரைப்பட துறை பிடித்த புதிய குரல் விருதையும் வென்றார். மேலும் சீமா விருதுகளில் சிறந்த அறிமுகப் பாடகியாக பரிந்துரைக்கப்பட்டார்.

திரைப்பட பங்களிப்புக்கள்

தொகு

பாடகி

தொகு
ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) மொழி
2012 காஸனோவ்வா தீம் இசை மலையாளம்
2012 ஈ அடுத்த காலம் "நாட்டில் வீட்டில்" மலையாளம்
2012 மாஸ்டர்ஸ் மலையாளம்
2012 மல்லு சிங் மலையாளம்
2012 ஹீரோ மலையாளம்
2012 உஸ்தாத் ஹோட்டல் "அப்பங்கள் எம்பாடும்", "மேல் மேல் மேல்" மலையாளம்
2012 யாருடா மகேஷ் "ஓடும் உனக்கிது", "வயதை கெடுத்து",

"யாருடா அந்த மகேஷ்"

தமிழ்
2013 லெப்ட் ரைட் லெப்ட் "சேகுவேரா" மலையாளம்
2013 ஏபிசிடி: அமெரிக்கன்-போர்ன் கான்ஃபுசெட் தேசி "ஜானி மோனே ஜானி", "வானம்",

"நயாபைசயில்லா" (ரீமிக்ஸ்)

மலையாளம்
2013 ஒட்டக சஃபாரி "ஹல்வா" மலையாளம்
2014 பெங்களூர் நாட்கள் "நான் பறக்க விரும்புகிறேன்" மலையாளம்
2015 லைலா ஓ லைலா "தில் தில்வானா" மலையாளம்
2016 பெங்களூர் நாட்கல் "நான் பறக்க விரும்புகிறேன்" தமிழ்

பாடலாசிரியர்

தொகு
ஆண்டு திரைப்படம் பாடல்(கள்)
2013 ஏபிசிடி: அமெரிக்கன்-போர்ன் கான்ஃபுசெட் தேசி "ஜானி மோன் ஜானி"
2014 பெங்களூர் நாட்கள் "என் கண்ணில் நின்னக்காயி", "நான் பறக்க வேண்டும்"
2015 லைலா ஓ லைலா "லைலா ஓ லைலா"

மேற்கோள்கள்

தொகு
  1. "I Want to Fly - Anna Katharina Valayi Bangalore Days - Download Track - Globalvideomusic.com". Archived from the original on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ன_காதறீன_வளயில்&oldid=4108855" இலிருந்து மீள்விக்கப்பட்டது