அன்மொழித் தொகை

இலக்கணம்

அன்மொழித் தொகை என்பது தமிழ் இலக்கணத்தில் ஆறு வகையான தொகைநிலைத் தொடர்களில் ஒன்றாகும். பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகை என்னும் மூன்று தொகைநிலைகளின் மேல் அன்மொழித்தொகை வரும் என்பது தொல்காப்பியர் கருத்து. [1] ஆறு தொகைநிலைகளில் அன்மொழித்தொகை ஏனைய ஐந்து தொகைநிலைகளின் மேலும் வரும் என்பது நன்னூல் கருத்து. [2]

விளக்கம்
பொற்றொடி வந்தாள்

இங்குப் பொற்றொடி என்பது பொன்னாலாகிய தொடி என மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாக உள்ளது. இதனை வந்தாள் எனும் முடிக்கும் சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் பொற்றொடி அணிந்த பெண் வந்தாள் என உணர்த்தும். பொன், தொடி ஆகிய இரண்டு சொற்களுக்கும் அப்பாற்பட்டுப் பெண் எனும் சொல்லிலே பொருள் நிற்பதால், பெண் எனும் சொல் அன்மொழியாகும்.

எடுத்துக்காட்டு [3]
தொகு
வரிசை எண் தொகையின் பெயர் எடுத்துக்காட்டு விரி
1 இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

மூன்றாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
நான்காம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
ஐந்தாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
ஆறாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

பூங்குழல் வந்தாள்

பொற்றொடி வந்தாள்
கவி இலக்கணம்
பொற்றாலி
கிள்ளிகுடி
கீழ்வயிற்றுக் கழலை

பூவை உடைய குழலினை உடையாள்

பொன்னால் ஆகிய தொடியினை உடையாள்
இது கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்
பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்
கிள்ளியினது குடியிருக்கும் ஊர்
கீழ்வயிற்றின் கண் எழுந்த கழலைபோல்வான்

2 வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை தாழ்குழல் வந்தாள் தாழ்ந்த குழலினை உடையாள்
3 பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை கருங்குழல் வந்தாள் கருமையாகிய குழலினை உடையாள்
4 உவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை துடியிடை வந்தாள் துடிபோலும் இடையினை உடையாள்
5 உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை தகரஞாழல் தகரமும் ஞாழலும் கலந்து உண்டாகிய சாந்து
- பன்மொழித் தொடர் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை தகரஞாழன்முலை வந்தாள் தகரமும் ஞாழலும் கூடி உண்டாகிய சாந்தை அணிந்த முலையினையுடையாள்
- பன்மொழித்தொடரில் அறுவகைத் தொகைகளும் கலந்து தொகையானது திகழ் செவ்வான் மதித் திருமுகப் பூங்குழல் திகழ்ந்த செம்மையாகிய வானத்தின்கண் மதிபோலும் திருமுகத்தினையும் பூவை அணிந்த குழலினையும் உடையாள்
அடிக்குறிப்பு
தொகு
  1. பண்பு தொக வரூஉம் கிளவியானும்,
    உம்மை தொக்க பெயர்வயினானும்,
    வேற்றுமை தொக்க பெயர்வயினானும்,
    ஈற்று நின்று இயலும்-அன்மொழித்தொகையே. (தொல்காப்பியம் 2-418)

  2. ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி (நன்னூல் 369)
  3. ஆறுமுக நாவலர் காண்டிகை உரை[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்மொழித்_தொகை&oldid=3789961" இலிருந்து மீள்விக்கப்பட்டது