அன்றாட வாழ்வின் வரலாறு

அன்றாட வாழ்வின் வரலாறு (Alltagsgeschichte, History of everyday life) என்பது 1980களில் குறிப்பாக செருமானிய வரலாற்றாசிரியர்கள் மத்தியில் அதிகமாக இருந்த அறிவியல் வளர்ச்சியின் ஒரு வடிவமாகும். இது செருமானிய வரலாற்று அறிஞர்களான ஆல்ஃப் லூட்கி, ஆன்சு மெடிக் ஆகியோரால் நிறுவப்பட்டது.[1]

இந்தச் சொல் இடாய்ச்சு மொழியிலிருந்து வந்தது. "ஆல்ட்டாக்" என்பதன் பொருள் அன்றாட வாழ்க்கை என்பதைக் குறிக்கும். இதனால் இது அன்றாட வரலாறு என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆல்ட்டாஜெஸ்சிட்டி என்பதன் முழுமையான பொருள், "கீழிருந்து வரலாறு" என்ற பரந்த மார்க்சிய வரலாற்றுப் பள்ளி பகுதியாகக் கருதப்படலாம்.[2]

ஆல்ட்டாஜெஸ்சிட்டி என்பதன் குறிக்கோள், சமூகத்தில் சாதாரண மக்களின் நாளாந்த அனுபவங்கள் மற்றும் அச்சமூகத்தில் ஏற்படும் பரந்த சமூக, அரசியல் மாற்றங்களுக்கிடையேயான இணைப்புகளைக் கண்டுபிடிப்பதாகும். இதனை மேற்கொள்ள மிகப்பெரும் பரந்த முயற்சி தேவைப்படுவதால், சிறிய அளவிலான வரலாற்றுத் தொடர்புகள் மூலம் இது மேற்கொள்ளப்படலாம். இதனால் இது நுண்வரலாற்றின் ஒரு வடிவமாகிறது.

வெளியீடுகள்

தொகு
  • The History of Everyday Life by German historian Alf Lüdtke

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்றாட_வாழ்வின்_வரலாறு&oldid=3845228" இலிருந்து மீள்விக்கப்பட்டது