அன்வாரா சையத் ஹக்
அன்வாரா சையத் ஹக் ( Anwara Syed Haq ; பிறப்பு 1940) வங்காளதேசத்தைச் சேர்ந்த இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் பல புதினங்கள், சிறுகதைகள், குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மனித உளவியல் பற்றிய தனது அறிவை தனது எழுத்துக்களில் அழகாகப் பயன்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்டவர். மேலும், இவர் தொழில் ரீதியாக ஒரு மனநல மருத்துவராக அறியப்படுகிறார். 2019 இல் மொழி மற்றும் இலக்கியத்திற்கான இவரது சாதனைகளுக்கு எகுஷே பதக் விருது வழங்கப்பட்டது.[1]
அன்வாரா சையத் ஹக் | |
---|---|
আনোয়ারা সৈয়দ হক | |
தாய்மொழியில் பெயர் | আনোয়ারা সৈয়দ হক |
படித்த கல்வி நிறுவனங்கள் | டாக்கா மருத்துவக் கல்லூரி |
வாழ்க்கைத் துணை | சையத் சம்சுல் ஹக் (தி. 1965) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅன்வாரா சையத் ஹக் ஜெஸ்ஸூர் நகரில் ஒரு பழமைவாத முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.[2] தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் ஜெஸ்ஸூரில் கழித்தார். மிகவும் பக்தியுள்ளவரான இவருடைய தந்தை இவரையும் மத பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் புதினக்கள், பத்திரிகைகள் அல்லது இலக்கியப் பொருட்களைப் படிக்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது. இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது இவருடைய தந்தையின் விருப்பம், அதே சமயம் இவர் ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார். ஆனாலும் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற 1959 இல் டாக்காவுக்குச் சென்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
கல்வி வாழ்க்கை
தொகுஜெஸ்ஸூரில் இளநிலை மற்றும் உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, இவர் 1959 இல் டாக்காவுக்குச் சென்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். 1965 இல் மருத்துவர் பட்டம் பெற்றார். 1973 இல் உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். 1982 இல் மருத்துவ மனநல மருத்துவத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் இங்கிலாந்தில் இருந்து வீடு திரும்பினார். பின்னர் இவர் பாகிஸ்தான் விமானப்படை, டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் பர்டேம் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இப்போது இவர் ஒரு மனநல மருத்துவராக வேலை செய்கிறார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅன்வாரா சையத் ஹக், எழுத்தாளரும் கவிஞருமான சையத் ஷம்சுல் ஹக்கை நவம்பர் 19, 1965 இல் மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் பிதிதா உயர்நிலைப் பள்ளி அளவில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார். இவரது மகன் டிடியோ ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணராகவும், கதைகள், பாடல்கள் எழுதுபவராகவும் மேலும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.[4]
விருதுகள்
தொகு- 2010 இல் பங்களா அகாடமி இலக்கிய விருது
- அன்னன்யா ஷாஹித்யா புரோஷ்கர்
- அக்ராணி வங்கி புரோஷ்கர்
- மைக்கேல் மதுசூதன் புரோஷ்கர்
- சிசு அகாடமி புரோஷ்கர்
- 2019 இல் எகுஷே பதக்
இலக்கியப் படைப்புகள்
தொகுஅன்வாரா சையத் ஹக்கின் முதல் சிறுகதை "பரிபர்தன்" 1954 இல் சங்கபாத்தில் வெளியிடப்பட்டது. 1955 முதல் 1957 வரை, அவர் இட்டெஃபாக்கின் "காச்சி கஞ்சர் ஆஷோர்" க்காக தொடர்ந்து எழுதினார். இவரது முதல் நாவல் 1968 இல் சச்சித்ர சாந்தனியில் வெளியிடப்பட்டது. இவரது முதல் நாவலுக்குப் பிறகு, இவர் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது பல நாவல்கள் டாக்கா மற்றும் லண்டனில் இருக்கும்போது எழுதப்பட்டவை ஆகும். இவரது வெளியீடுகளில், இருபத்தைந்து நாவல்கள், மூன்று கவிதைத் தொகுதிகள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள், எட்டு கட்டுரைத் தொகுப்புகள், மூன்று சுயசரிதைத் தொகுதிகள், இரண்டு பயணக் கட்டுரைத் தொகுப்புகள், இளம் வாசகர்களுக்கான நாற்பது கற்பனைக் கதைகள் போன்றவை அடங்கும்.[5]
சான்றுகள்
தொகு- ↑ "21 awarded with Ekushey Padak 2019". Dhaka Tribune. 2019-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
- ↑ "Anwara Syed Haq: The experimenter and innovator". The Daily Star. March 8, 2010. பார்க்கப்பட்ட நாள் August 10, 2012.
- ↑ "Dr Anwara Begum: Psychiatrist". Dr Anwara Begum. November 7, 2015. Archived from the original on October 20, 2016. பார்க்கப்பட்ட நாள் November 7, 2015.
- ↑ "Ditio Syed-Haq, Partner Profile". Indigo ICT. November 7, 2015. Archived from the original on மார்ச் 30, 2016. பார்க்கப்பட்ட நாள் November 7, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)