அபகத்தம்
அபகத்தம் (பிராகிருதம்: அபசத்த, மூலமான சமசுகிருதத்தில் அபசப்த;[2] "பொருளற்ற ஓசை") என்பது இந்தோ-ஆரிய மொழிகளின் கிழக்குப் பிரிவின் படிவளர்ச்சியின் ஒரு படிநிலையாகும். கிழக்குப் பிரிவில் அசாமிய மொழி, வங்காளி, போச்புரி, மககி, மைதிலி மற்றும் ஒடியா போன்ற மொழிகள் உள்ளடங்குகின்றன. அபகத்தம், அபபிரம்ச அவகத்தம், அபபிரம்ச அபகத்தம் அல்லது பூர்வி அபபிரம்சை எனவும் அழைக்கப்படுகிறது. அபகத்தம், அபபிரம்சை நிலை, அதாவது மாகதிப் பிராகிருதத்திலிருந்து உருவான அபபிரம்சைகளிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.
அபகத்தம் | |
---|---|
பிராந்தியம் | இந்தியா |
Extinct | 14ம் நூற்றாண்டு |
இந்தோ-ஐரோப்பியன்
| |
தேவநாகரி, வங்காளி-அசாமியம், திருதம், ஒடியா | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | இல்லை |
மொழிக் குறிப்பு | இல்லை[1] |
6ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த அபகத்தம், சில அபபிரம்சைகள் மற்றும் பண்டைய ஒடியா, பண்டைய வங்காளி, பண்டைய மைதிலி மற்றும் பண்டைய அசாமிய மொழி போன்ற முந்தைப் புதிய மொழிகளுடன் சமகாலத்தில் வழக்கிலிருந்தது. "சர்யாபத"ப் புலவர்கள் போன்ற பல புலவர்கள், அபகத்தம் மற்றும் ஏதேனுமொரு புதிய மொழியில் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், அபகத்த மொழியில் தோகைகள் அல்லது சிறு சமயப் பாடல்களை எழுதியுள்ளனர். மைதிலிப் புலவரான வித்தியாபதி தனது பாடலான "கீர்த்திலதை"யை அபகத்தத்தில் எழுதியுள்ளார்.
அபகத்த நிலை பின்வரும் பண்புகளைக் கொண்டுள்ளது.
- முன்னொட்டு மற்றும் பின்னொட்டுகளின் இழப்பு
- பால்நிலை இலகணத்தின் இழப்பு
- குறில் உயிரெழுத்துக்களின் மிகையான பயன்பாடு
- சொல்லின் இறுதியில் அல்லது நடுவில் மூக்கொலிப்படுத்துகை
- /s/ ஒலிப்புக்கு மாற்றான /h/ ஒலிப்புப் பிரதியீடு
வங்காளி மொழியின் வரலாற்றில், அபகத்த நிலையின் பின்னர் அண்ணளவாக 1100ம் ஆண்டில் பண்டை வங்காளி மொழி உருவெடுத்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "அபகத்தம்". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Deshpande, Madhav - Sanskrit and Prakrit, p.32
வெளியிணைப்புக்கள்
தொகு- Bhowmik, Dulal (2012). "Abahattha". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.