அபயகிரி விகாரை

history
(அபயகிரி தாதுகோபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2 நூற்றாண்டுகள் முதல், கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை இல்லையெனில் தலை நகரமாக இருந்த அனுராதபுரம், ஒரு அரசியல் தலைமை இடமாக விளங்கியது மட்டுமன்றிப் பல பௌத்த சமய வணக்கத் தலங்களையும், பௌத்த பிக்குகளுக்கான மடங்களையும் கொண்டிருந்தது. பௌத்த மக்களின் முக்கிய யாத்திரைக்கு உரிய இடமாக விளங்கிய அனுராதபுரம் நகரத்தின் வடக்குப் பகுதியில், உயர்ந்த மதில்களால் சூழப்பட்டு, நீராடுவதற்கான குளங்களையும், அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய கட்டிடங்களையும், கொண்ட அபயகிரி விகாரை 235 எக்டேர் பரப்பளவில் அமைந்திருந்தது.[1] அனுராதபுரத்திலிருந்த, அவ்வாறான 17 சமய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய அபயகிரி விகாரை, அவற்றுள் முக்கியமான ஐந்து விகாரைகளுள் மிகப் பெரியது ஆகும்.

அபயகிரி விகாரை

அபயகிரி விகாரை, பௌத்த துறவிமடக் கட்டிடத் தொகுதியாக விளங்கியது மட்டும் அன்றிப் பௌத்த துறவிகளின் சங்கமாகவும் தொழிற்பட்டது. இது, இலங்கையின், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கை முறை முதலானவை தொடர்பான தகவல்களைப் பதிந்து பாதுகாத்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இது, கி.பி முதலாம் நூற்றாண்டில், உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த, பௌத்த அறிஞர்களைக் கவரும் அனைத்துலக நிறுவனம் ஆனது. கிளை நிறுவனங்களூடாக நடைபெற்ற இதன் செயற்பாடுகளின் தாக்கத்தை உலகின் பல பகுதிகளிலும் காண முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Balagobalan, Poongulaly. "அபயகிரி ஸ்தூபம் மக்களின் பார்வைக்காக இம்மாத இறுதியில் !". tamil.news.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபயகிரி_விகாரை&oldid=3399425" இலிருந்து மீள்விக்கப்பட்டது