அபய் பிரசால் உள்விளையாட்டரங்கம்
அபய் பிரசால் உள்விளையாட்டரங்கம் (Abhay Prashal Indoor Stadium) இந்தியாவில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூரில் அமைந்துள்ள ஒரு உள்விளையாட்டு அரங்கமாகும். மேசைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் முதலிய விளையாட்டுகளுக்காக, மத்தியப் பிரதேச அரசு 3.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து இவ்வரங்கத்தை கட்டியுள்ளது. 1994 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் அப்போதைய மத்தியப்பிரதேச முதல்வர் அர்ச்சுன் சிங் இவ்விளையாட்டரங்கத்தைத் திறந்து வைத்தார். 10000 பேர் அமர்ந்து பார்க்ககும் வசதியுடைய இவ்விளையாட்டு அரங்கத்தில் பல அரசியல் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் இறகுப்பந்தாட்டம். கூடைப்பந்தாட்டம் மற்றும் டென்னிசு பந்தாட்டம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.[1][2]
அபய் பிரசால் உள்விளையாட்டரங்கம் Abhay Prashal Indoor Stadium | |
---|---|
முழு பெயர் | அபய் பிரசால் உள்விளையாட்டரங்கம் |
இடம் | இந்தூர், மத்தியப் பிரதேசம் |
அமைவு | 22°43′30″N 75°52′40″E / 22.724993°N 75.877749°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1994 |
திறவு | 1994 |
உரிமையாளர் | |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | 10,000 |
2012 ஆம் ஆண்டில் அபய் பிரசால் உள்விளையாட்டரங்கமானது அனைத்துலக மேசைபந்தாட்டக் கூட்டமைப்பின் பயிற்சி மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தெற்கு ஆசியப் பகுதியில் இணையதள இணைப்பு வசதியுடன் இருக்கும் ஒரே மையமாக இப்பயிற்சி மையம் விளங்குகிறது.
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2015-12-14 at the வந்தவழி இயந்திரம்
- Wikimapia